Wednesday, November 1, 2023
HomeArthamulla Aanmeegamபலரும் தங்களது வாழ்க்கையை விரக்தியாக நினைப்பது ஏன்?

பலரும் தங்களது வாழ்க்கையை விரக்தியாக நினைப்பது ஏன்?

பொதுவாக பலரும் தங்களது வாழ்க்கையை விரக்தியாக நினைப்பது எப்போது என்று சிந்தித்துப் பார்த்தால் அது தான் எதிர்பார்த்தது கிடைக்காத நேரங்களில் தான் தங்களது வாழ்க்கையை விரக்தியாக நினைக்கின்றனர். அதனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு தான் அவர்களுக்கு விரக்தி மனநிலையை உருவாக்குகிறது என்று எண்ணுவோம். ஆனால் உண்மை அதுவல்ல.*

*தான் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் போனால், ஏன் அவர்கள் தங்கள் வாழ்க்கையையே விரக்தியாக நினைக்க வேண்டும் வேறு ஒன்றை எதிர்பார்த்து கடந்து செல்லலாமே? என் தங்கள் வாழ்க்கையை விரக்தியாக நினைக்க வேண்டும்? ஏனென்றால், எதிர்பார்ப்பு ஏன் ஏமாற்றத்தை அத்தனை வலிமையாக கொடுக்கிறது? அந்த அளவிற்கு அதன் உள்ளிருக்கும் உளவியல் என்ன?*

*நன்றாக கவனித்துப் பார்த்தால், விரக்தியான மன நிலையில் இருக்கும் பொழுது, நான் எதிர்பார்த்தது எதுவுமே கிடைக்கவில்லையே? ஏன் நம் வாழ்க்கை இப்படி இருக்கிறது? நாம் எதை எடுத்தாலும் ஏன் தோல்வியில் முடிகிறது? என்பது போன்ற பல கேள்விகளை நாம் கேட்கிறோம். இந்தக் கேள்விகள் அனைத்தும் நாம் எதிர்பார்ப்புகளை தாண்டியது.*

*வெறும் எதிர்பார்ப்புகளால், ஏமாற்றங்களால் மட்டுமே இத்தனை பாதிப்புகளை நம்முள் ஏற்படுத்தி விட முடியுமா? அப்படியெனில் என்னதான் நம்முள் நடக்கிறது? ஏன் நம் வாழ்க்கையில் நமக்கு விரக்தி ஏற்படுகிறது?*

*உண்மை என்னவெனில் அவர்களுக்கான வாழ்க்கையில் அவர்களுக்கான இலக்கு என்று எதுவும் இல்லாமல் இருப்பது தான் அவர்களது வாழ்க்கையை விரக்தியாக மாற்றுகிறது.*

*எந்தவொரு இலக்கும் இல்லையெனில் என் அடுத்த கட்ட பயணம் என்னவாக இருக்கும்? நாம் எதை நோக்கிச் செல்வது? எங்கே செல்வது? என்று பல கேள்விகள் நம்முள் உள்முகமாக தலைதூக்கத் தொடங்கும் அதன் விளைவே என்னால் முடியவில்லையே என்கிற விரக்தி மனநிலை.*

*இந்த விரக்தி மன நிலையை சரி செய்ய நினைத்தால் ஒரு இலக்கை தேர்ந்தெடுங்கள். ஒரு சிறப்பான இலக்கை தேர்ந்தெடுங்கள்.*

*நீங்கள் உறுதியாக ஒரு இலக்கை நம்பினால் அதன் பின்னால் நம்பிக்கையுடன் நடந்து சென்றால் எந்தவொரு ஏமாற்றமும் உங்களை பாதிக்காது.*

*நீங்கள் ஒரு நல்ல இலக்கை அதுவும் மற்றவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் ஒரு நல்ல இலக்கை நோக்கி நகர்ந்து செல்லும் போது உங்கள் மனம் உங்களை பாராட்டும்.*

*உங்கள் மனமே உங்களைப் பாராட்டுவதில் தான் உங்களுடைய திருப்தி அடங்கியிருக்கும். எனவே எந்த ஒரு ஏமாற்றமும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படாது ஒரு வேளை ஏற்பட்டாலும் அது உங்கள் முன்னேற்றத்திற்காகவே இருக்கும் அது உங்கள் வாழ்க்கையை விரக்தி ஆனதாக மாற்றாது.*

*இந்த நொடி நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக,*

*பொறுமையை விட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும், இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.*

*முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

*ஓம் நமசிவாய*

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + nineteen =

Most Popular