மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம்.
வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம்.
கசப்பையே இயற்கை அன்னையின்—அல்லது தர்மநியதியின்—மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.” –
சார்வரி புத்தாண்டு வாழ்த்துகள்…..
பிறக்கும் இனிய புத்தாண்டு,
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துகள் !!!!
புத்தாண்டில் இப்படியும் தீர்மானங்கள் இருக்கலாமே….!!!
1. ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு…..
2. மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்…..
3. நன்றி, இந்த வார்த்தையை முடிந்தவரை அதிகம் உபயோகி…..
4. உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்…..
5. உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து……
6. ரகசியங்களைக் காப்பாற்று…..
7. புதிய நண்பர்களைத் தேடிக்கொள். பழைய நண்பர்களை மறந்துவிடாதே…..
8. தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்…..
9. உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்…..
10. தைரியமாக இரு. உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி…..
11. ஒரு போதும் மற்றவரை ஏமாற்றாதே…..
12. கவனிக்கக் கற்றுக்கொள். சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்…..
13. கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே…..
14. உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்……
15.மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்……
16. ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே…..
17. வதந்தி, வம்பு பேசுவதைத் தவிர்…..
18. போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு…..
19. ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே. பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை……
20. வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே……
21. பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு……
22. எனக்குத் தெரியாது, மன்னிக்கவும், என்பதை தேவையான இடத்தில் சொல்லத் தயங்காதீர்……
நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்….
மஹா பெரியவா ஆசியுடன் இந்த புதிய புத்தாண்டில் சிறப்பாக வாழ வாழ்த்துகள் !!!
ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர !