1. மகாபாதகன் ஒரு மாதக் காலத்துக்கு புருஷஸூக்தம் கூற வேண்டும்.
2. அகர்ஷண மந்திரத்தை மும்முறை உச்சரித்தல், வாயு, யமனுக்குõன மந்திரங்கள், காயத்திரி மந்திரமும் உச்சரித்தலால் சாதாரணக் குற்றங்களிலிருந்து ஒருவன் விடுபடலாம்.
3. கிருச்ச விரதம் – மொட்டை அடித்துக் கொண்டு, நீராடி, ஹோமம் செய்து ஹரியை வழிபட வேண்டும். பகலில் நின்று கொண்டும், இரவில் உட்கார்ந்து கொண்டும் கழிக்க வேண்டும்.
4. சாந்திராயன விரதத்தைக் கடைப்பிடிப்பவன் ஒரு நாளைக்கு எட்டுப்பிடி – காலையில் 4 பிடி, மாலையில் 4 பிடி என்று உணவு கொள்ள வேண்டும்.
5. தப்தகிருச்சம்: முதல் மூன்று நாட்கள் மூன்று கை வெந்நீர், அடுத்த மூன்று நாட்கள் மூன்று கை சூடான பால், அதற்கடுத்த மூன்று நாட்கள் சூடான நெய் அதே அளவு, கடைசி மூன்று நாட்கள் காற்றே ஆகாரம்.
6. கிரச்ச சந்தானபன விரதம்: ஒரு பகல், ஓர் இரவு சுத்த உபவாசம்.
7. பாரகயஜ்ஞ கர்மாவுக்கு பன்னிரண்டு நாட்கள் உபவாசம்.
8. பிராஜாபத்யம் – ஒரு வேளை உணவு மட்டும். மூன்று நாட்களுக்கு.
கிருச்ச விரதம்: ஒரு பிராம்மணன் மேற்கொள்வதை விட க்ஷத்திரியன் ஒரு மாதம் குறைவாகவும், வைசியன் இரண்டு மாதம் குறைவாகவும் விரதம் கொள்ள வேண்டும்.
9. பல கிருச்சத்துக்கு ஒரு மாத காலம் பழ உணவு மட்டும்; ஸ்ரீ கிருச்சத்துக்குப் பேயத்தி பழம் மட்டும் உணவு.
10. பத்மாக்ஷம் – 1 மாதகாலம் – நெல்லிக்காய் மட்டும் உணவு.
புஷ்ப கிருச்சத்துக்கு மலர்கள், பத்திர கிருச்சத்துக்கு இலைகள், மூல கிருச்சத்துக்கு மலர், தோய கிருச்சத்துக்கு நீர் ஆகாரம்-இவற்றைத் தனியாகவோ, தயிர் (அ) மோர் கலந்தோ உட்கொள்ளலாம்.
11. வாயல்யம் என்ற பிராயச்சித்தம்: எல்லாப் பாபங்களையும் நசிக்கச் செய்யும் – ஒரு மாதகாலம் – நாள் ஒன்றுக்கு ஒரு பிடி அன்னம்.
12. கிருச்சம், ஆக்நேயம் – பன்னிரண்டு நாட்கள் ஒரு கையளவு நல்லெண்ணெய் உட்கொள்ள வேண்டும். பாபங்களை விலக்கிக் கொள்ளவும், செல்வம் பெறவும், மரணத்துக்குப்பின் விண்ணுலகு அடையவும் ஒருவன் கிருச்சவிரதம் மேற்கொள்ளலாம்.
காயத்திரி மந்திரம், பிரணவ மந்திரம், நாராயணன், சூரியன், நரசிம்மர் மூலமந்திரங்களும் பாபங்களைப் போக்கக் கூடியவை.
சந்திராயன விரதத்தை மேற்கொள்ளுபவன் பவுர்ணமியன்று 15 கவளம், அடுத்த நாள் முதல் 14, 13 என்று குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை அன்று சுத்த உபவாசம் இருக்க வேண்டும். அடுத்த நாள் ஒரு கவளம் மட்டும் உட்கொண்டு அது முதல் ஒவ்வொன்று கூட்டி பவுர்ணமி அன்று 15 கவளம் உட்கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு இரண்டு அமாவாசை வந்தால், அது மலமாசம், அந்த மாதங்களில் விரதம், ஓமம், பிரதிக்ஞை – திருவுருவப் பிரதிஷ்டை கூடாது. ஒரு பவுர்ணமி முதல் அடுத்த பவுர்ணமி வரை உள்ள நாட்கள் கொண்டது சாந்திர மாசம்; முப்பது நாட்களை உடையது சவுர மாசம்; சூரியன் ஒரு ராசியில் தங்கி இருக்கும் காலம் சவுர (அ) சூரிய மாதம்; 27 நாட்களைக் கொண்டது நட்சத்திர மாதம் எனப்படும். விரதகாலத்தில் தரையில் உறங்க வேண்டும். ஜபங்களை விடாமல் செய்ய வேண்டும். பிராமணர்களுக்குத் தக்ஷிணை, தானம் தர வேண்டும். பசு, சந்தனக்கட்டை, பாத்திரங்கள், நிலம், குடை, கட்டில் போன்றவை தானப் பொருள்களாகும்.
