Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegam"இராம நாம மகிமை"

“இராம நாம மகிமை”

நமது ஒவ்வொரு மூச்சும் ‘ராம் ராம்’ என்றே உட்சென்றும், வெளியேறுதலும் வேண்டும்.
நாம் அறியாமல் செய்த தவறுக்கு ‘ராம நாமமே’ மிகச் சிறந்த பிராயசித்தம்.
எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் ‘ராம நாம ஜெபமே’ ‘ராம நாமமே’ தன்னுள் குருவையும் கொண்டுள்ளது. நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது ‘ராம நாமம்’.
‘ராம நாம’ ஜெபத்தில் நாம் இருந்தால், நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ, அவமானமோ இருந்தால் அவைகள் தடுக்கப்படும்.

எந்த இடத்திலும், எந்த நிலையிலும் ‘ராம நாமா’ சொல்லலாம்.
‘ராம நாமா’ எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் ‘ராம நாமா’ சொல்ல மனம் மட்டும் போதும்.

ஒரு வீட்டில் உள்ள பெண் ‘ராம நாமா’ சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம் வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும்.

எல்லாவித சாஸ்திர அறிவும் ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் ‘ராம நாமா’ சிறந்த மருந்து.

காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை சப்தரிஷி பூஜையின் போது வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

பெண்கள் சமைக்கும் பொழுது ‘ராம நாமம்’ சொல்லி சமைத்தால், அந்த உணவே பிரசாதமாகிவிடும்.

ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில் ‘ராம நாமா’ அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும்.

‘ராம நாமா’ சொல்ல சொல்ல பரப்ரம்மாகி விடுகிறோம் .

நமது ஒரே அடைக்கலம் ‘ராம நாமா’. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும்.
மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும். மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் ‘ராம நாமா’ ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று முக்தி தரும்.

‘ராம நாமா’ சொல்லுவதன் மூலம் பார்ப்பது ராம், பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம், புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் , நன்மை, தீமை, இன்பம் துன்பம், எல்லாம் ராம் , எல்லாம் ராம், எல்லாம் ராம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =

Most Popular