எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை ஸ்ரீ ராமருக்கு நிவேதனம் செய்தால் அதிர்ஷடம் உண்டாகும் தெரியுமா?

248

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஸ்ரீ ராமருக்கு நிவேதனம் செய்து வழிபட வேண்டிய ஒரு நிவேதன பொருள் உண்டு. அந்தந்த ராசிக்காரர்கள் அந்தந்த பொருட்களை வைத்து வழிபட்டால் சகல வளங்களும் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் மற்றும் தொழிலில் நல்ல மாற்றங்கள் உருவாகும். உங்கள் ராசிக்குரிய நிவேதன பொருள் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் உங்களது பிரச்சனைகளை, மனக்குறைகளை ஸ்ரீ ராமருக்கு மாதுளை பழம் மற்றும் லட்டு இவற்றை வைத்து வழிபட்டு வந்தால் அனைத்தும் நீங்கி விடும். அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய தொழில் பிரச்சனை, உத்யோக பிரச்சனைகளை ஸ்ரீராம நவமியன்று ராசகுல்லா படைத்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியமும் பெற்று வாழலாம். வியாபார விருத்தி உண்டாகும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தீராத நோயால் அவதிபட்டு வந்தால் ஆரோக்கியம் சீராக வேண்டி முந்திரி பர்பி வைத்து வழிபட்டு வந்தால் நினைத்தது நடக்கும். தீரா பிணி தீரும். நலமுடன் வாழலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டி ஸ்ரீராமருக்கு தேங்காய் பர்பி படைத்து வழிபட்டு வந்தால் காரிய தடை நீங்கும். எந்த புதிய முயற்சிகளும் வெற்றி பெற்று தரும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் வெல்லம் வைத்து ஸ்ரீ ராமரை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வந்தால் அஷ்ட ஐஸ்வர்யமும் சேரும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்கள் தொழில் விருத்தி மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஸ்ரீ ராமபிரானை பச்சை நிறம் கொண்ட பழங்களால் படையல் வைத்து வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும். திருமண தடை நீங்கி விரைவில் திருமண யோகம் வரும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் வாழ்வில் இதுவரை சந்தித்த தொடர் சறுக்கல்கள் ஏராளம் இருக்கும். அவமானம், தோல்வி என்று நீங்கள் சந்தித்த துயரங்கள் அனைத்தும் நீங்கி சுபீட்சம் பெற ஸ்ரீ ராமரை ஸ்ரீராம நவமி அன்று ஆப்பிள் நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் நல்ல பலன் காணலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் பண பிரச்சனையை சமாளிக்க வேண்டி எள்ளு உருண்டையை ராமருக்கு நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனையையும் தீர்க்க ஸ்ரீ ராமருக்கு கடலை மாவு கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகளை நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் நல்ல பலன் காணலாம்.
மகரம்: மகர ராசிக்காரர்கள் ஸ்ரீ ராமருக்கு ராம நவமி அன்று கருப்பு நிறம் கொண்ட பழங்களை நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் சகலமும் உங்கள் வசப்படும். தொட்டதெல்லாம் துலங்கும்.
கும்பம்: கும்பம் ராசிக்காரர்கள் தொழில் முன்னேற்றம் ஏற்பட வேண்டி சப்போட்டா பழம் நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் தடையின்றி வெற்றி கிட்டும். தொழில் லாபகரமாக இருக்கும்.
மீனம்: மீனம் ராசிக்காரர்கள் தங்கள் குறைகளை போக்க கோரி மனதார ஸ்ரீ ராமருக்கு வாழை பழம் நிவேதனம் செய்து வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் நீங்கி அனைத்து வளங்களும் உண்டாகும்.