தலையெழுத்தை மாற்றக்கூடிய சரபேஸ்வர வழிபாடு!
தலையெழுத்தை யாராவது மாற்ற முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். இறைவனாலும் முடியாதே என்று சொல்ல கூடியவர்கள். உங்கள் எண்ணங்களை மாற்ற வேண்டிய நேரம் இது.
சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால் தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி கிடைக்கும்.
சரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சம் என்பதால் 11 நெய்தீபம் ஏற்றி வணங்குவது விஷேசம். உலகைகாக்கும் ஈசனின் ஒரு வடிவமே சரபேஸ்வரர் ஆவார்.
சரபேசர் : 1. சிவன் , 2. விஷ்ணு , 3. காளி(பிரத்யங்காரா தேவி), 4. துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம்தான் சரபேசர்.
எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.
இரணியனது வரத்தின் படியே,அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார்.நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.
பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் சிவன் நடுக்கம்தீர்த்த பெருமான் என்றானார். சரபம் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள். பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் “சிம்மக்ன மூர்த்தி”, “சிம்ஹாரி”, நரசிம்ம சம்ஹாரர்” என்றும் அழைக்கப்படுகின்றது.
பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர்
சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள்.
பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள்.
இந்திரனே நகங்கள்.
காலனே தொடைகள்.
சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும்.
தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அல்லது 1000 முறை ஜெபித்து, ராகு காலத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும்.
மலட்டுத் தன்மை நீங்கும்.
ராகு காலம் நீடிக்கும் 1 மணி நேர மும் சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது எதிரிகளிடமிருந்து பகைவரிமிருந்தும் பாம்பு களிடமிருந்து காத்திடும்.
சரபேஸ்வரரின் அருள் இருந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லைகள் சுலபமாக நீங்கி விடும். சரபேஸ்வரரை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்கள் நலம் பெறுவார்கள். உங்கள் குலதெய்வமும், இஷ்ட தெய்வமும், எப்போதும் உங்களுடனே இருந்து பாதுகாப்பது போல, உணர்வு கிடைக்கும். இதை நெற்றியில் இட்டுக்கொண்டால்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே திருபுவனம் என்கிற கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கம்பகரேஸ்வரர் என்று அழைக்கப்படும் சபரேஸ்வரர் கோவில். இந்த சபரேஸ்வரர் தான் உங்கள் தலையெழுத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி உங்களுடைய சிக்கலில் இருந்து விடுவித்து அருள் புரிகிறார். இங்கு பிரசித்தி பெற்ற பல கோவில்கள் இருக்க பக்தர்களின் அதிக நம்பிக்கையை கொண்ட கோயிலாக உள்ளது சரபேஸ்வரர் கோவில் தான்.
மனிதன் இந்த கலியுகத்தில் தனக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் போக்கிக் கொள்ளவும், தனக்கு நேரும் அனைத்து ஆபத்துகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் சரணடைய வேண்டிய தெய்வம் சரபேஸ்வரரே. இந்த சபரேஸ்வர் உருவான காரணமும் உண்டு. நாராயணன் இரண்யகசிபுவை வதம் செய்வதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காது திமிரிக் கொண்டிருந்த நரசிம்மனின் உக்கிரத்தை தணிப்பதற்காக அவரை விட உக்கிரமாக வெளிப்பட்ட சிவபெருமானின் வடிவமே சரபேஸ்வர வடிவம் ஆகும்.
சரபேஸ்வரர் உருவமானது மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை. அதிலும் தங்க நிற பறவையின் உடலும், இறக்கை இரண்டும் மேல் தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழ் நோக்கியும், 4 கால்கள் மேல் நோக்கிய யபடியும், வால் மேல் தூக்கியபடியும், தெய்வத் தன்மை கொண்ட மனிதத் தலையும் சிங்கமுகமும் கொண்டு விசித்திரமாக அருள்பாலிக்கிறார். ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி தேவி ஆகியோர் இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள்.
சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்யங்கிரா தேவி தோன்றி நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் சரபேஸ்வரரின் சக்தியை பற்றி லிங்க புராண குறிப்புகளும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி இவர் நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
சரணாகதியின் மகத்துவம் தெரியுமா?
அக்னி தெய்வமாகவும் சரபேஸ்வரரை வணங்குகிறோம். நம்மை பாதுகாக்க நம் கண்களுக்கு புலப்படாத எதிரிகளை அழித்து அபயமளிப்பவர். இவரை வேண்டி வணங்கினால் அனைத்து துன்பங்களிலிருந்தும் தப்பித்து விடலாம். இவரை வழிபட்டால் பில்லி, ஏவல், சூனியம் போன்ற தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடலாம். தீரா நோயால் பாதிப்புக்குள்ளானாலும் அதிலிருந்தும் விடுபடலாம். இவரை ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தில் வழிபடுவது சிறப்பு. இந்த காலத்தில் நமது கண்களுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் என்று ஏராளமானது இருக்கிறது. அவற்றை அழிக்க இவரை வழிபடலாம்.
விதியையும் மாற்றுவார் சரபேஸ்வரர்!
எந்த செயல் செய்தாலும் வெற்றி கிடைக்க வேண்டுமென்றாலும், உடல்நிலை சரி செய்யவும் இவரை வழிபடலாம். அதோடு தரித்தரங்கள் நீங்கவும் இவரை வழிபடலாம். இவரின் சக்திகளான பிரத்யங்கிரா தேவியை வணங்கினால் நமக்கு வரவிருக்கும் ஆபத்து நீங்கும், இன்னொரு சக்தியான சூலினி துர்க்கையின் அம்சத்தை பெற்றிருப்பதால் அனைவரின் நலம் காப்பாள் என்பதால் நாம் செய்யும் காரியங்கள் தடை பட்டால் இவளை வழிபடலாம். இப்படி நமது தலை விதியை மாற்றும் வல்லமை படைத்த சரபேஸ்வரரை வழிபட்டு வளமாய் வாழுங்கள்.
