Monday, October 23, 2023
HomeArthamulla Aanmeegamசிவலிங்கம் என்றால் என்ன ?

சிவலிங்கம் என்றால் என்ன ?

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியர்கள் எண்களை மிகவும் பக்குவத்துடன் கையான்டனர் ……….

அதை பின் அரேபியர்கள் மூலம் அனைவரும் பயன் படுத்தும் எண்களாக வெளியே சென்றது பின் இது இந்தோ-அரபியன் எண்களாக அறிமுகம் செய்ய பட்டது. அதில் பூஜியம் நாம் தாம் முதலில் கண்டு பிடித்தோம் என்று பல ஆய்வுகள் சொல்கிறது, அந்த பூஜியத்தை கண்டுபிடிக்க நம்மால் எப்படி முடிந்தது? பூஜியம் என்னும் ஞானம் கடந்த 2 நூற்றாண்டுகளாக தான் இருக்கிறது என்று உலகம் என்னலாம், ஆனால் உண்மையில் பூஜித்ததின் பொருள் சூனியம் (வடமொழியில் பூஜியத்தை “சூனிய்” Sūnyā என்று தான் அழைப்பர்)

சூனியம் என்றால் வெறுமை, வெற்றிடம், இவைகளை குறிக்க சூனியம் என்பது காற்றும் இல்லாத Space எனப்படுவது இந்த சூனியம் இந்த சூனியத்தில் வட்டமாய் சுழித்து நடுவில் ஒரு புள்ளி வைத்து குறிப்பிடுவர் இதுவே பூஜியம் ஒன்றும் இல்லாத ஒன்றை எப்படி என்னாக அறிவிக்கலாம்? இதன் பதில் சுலபம் அந்த படத்தில் ஒரு புள்ளி அதை சுற்றி வட்டம் இடையில் ஒன்றும் இல்லை அதாவது ஒன்றுமில்லாததையும் ஏதோ ஒன்று இயக்குகின்றது என்பதே அதன் பொருள், அந்த ஒன்றுமில்லாத ஒன்று ஒரு எண்ணுடன் சேர்ந்தால் பல மதிப்புகளை தரவல்லது (value) அந்த ஒன்றுமில்லாத சூனியம் எனப்படும் ஒன்று இன்று கனித துறையில் எண்னில் அடங்காதவைகளை செய்ய வைக்கிறது. அந்த எண் இல்லை என்றால் இன்று கணிதமே இல்லை என்பது தான் உண்மை.

இதற்கும் சிவலிங்கத்திற்கும் எண்ண சம்பந்தம்? சொல்கிறேன் இந்த சூனியமே சிவலிங்கம், சிவம் என்றால் சூனியம் என்பது பொருள் பண்டைய இந்தியாவில் இந்த சூனியம் எண்ணும் இந்த ஞானமே மேலானதாய் கருதபடுவது அந்த ஞாமே தலைசிறந்த ஞானம் காரணம் வெறுமை இன்றி ஒன்றும் செய்ய இயலாது, ஒரு பூ பூக்க கூட ஆகாச மண்டலம் குறிபிட்ட தூரத்தில் இருப்பினே நடக்கும், அதுவே நியதி, அந்த ஆகாச மண்டலத்தில் Space எனப்படும் வெற்றிடம் எப்பொழுதும் இருக்க வேண்டும், அதை ஏதோ ஒன்று இயக்க வேண்டும். அந்த இயக்கமே சிவலிங்கம். வான் மண்டல ஆகாச ஞானமே சிவலிங்கம். இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும், அந்த பூஜியமே இந்த சிவலிங்கத்தின் மேல் பகுதி அதை அலங்கரிக்க பட்ட பீடத்தின் மேல் வைத்து உள்ளனர், அந்த சூனியமே தலையானது அது இல்லை என்றால் எதுவும் இல்லை, சூனியம் கடவுளா எப்படி? சொல்கிறேன், புத்தர் என்ன சொன்னார் கடவுள் சூனியம் என்றாரா? குரான் என்ன சொல்கிறது அல்லா உருவமற்றவர் என்கிறதா? (சூனியம் என்றால் வெறுமை வெறுமையை தவிர்த்து அனைத்திற்கும் உருவம் உண்டு) அப்படி பட்ட அந்த சூனியம் என்னும் ஆற்றலை இன்று அறிவியல் Dark Energy என்கிறது. இந்த Dark energy எனப்படும் ஆற்றலே தலயாய ஆற்றல் அதை எதனாலும் அலவிட இயலாது என்கிறது அறிவியல் அந்த ஆற்றலே நாம் சிவம் என்கிறோம் .

சிவலிங்கம் பற்றி யாராலும் அறிய முடியவில்லை நாள்தோறும் பல அறிவியல் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன, இதிலிருந்து ஒரு சிவதத்துவத்தை மட்டும் சிவன் நமக்கு தொடர்ந்து கூறுகின்றார் அது என்னவொன்றால் சிவனாகிய தான் அறிய முடியாதவன் ஆதி அந்தம் அற்றவன் என்னை அறிய நினைத்தால் கடைசியில் ஒன்றும் இல்லை என்ற தத்துவமே மிஞசும். என்னை அறிய முடியாது. ஆனால் பக்தர்கள் என் மீது கொண்ட அன்பால் தூய மனதால் எளிதாக உணரலாம் என்றும், இந்த பிரபஞ்சமே தன்னுள் அடக்கம் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறான்.

ஓம் நம சிவாய

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =

Most Popular