மதுரை மீனாட்சி அம்மன் தனி சிறப்புகள்!
1. மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.
2. அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக அவ்வாறு இருப்பதாக வரலாறு கூறுகிறது.
3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும்.
4. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர் உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.
5. அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும்.
6. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
7. அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும். ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ர பாண்டியனுக்கு முடிசூட்டிய பின் சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்று விட்டாள் அதனால் சுயம்பு அன்னை.
8. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.
9. அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும்.
10. மதுரையில் மீனாட்சி அன்னைக்கே முதல் மரியாதை. அதன் பிறகு தான் சுவாமியை வணங்க வேண்டும்.
11. மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி.
12. இந்தக் கோயில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது.
13. வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய கோயில் இது.
14. சித்திரை திருவிழா அன்னை மீனாட்சிக்கும், ஆவணி மூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும்.
15. மீனாட்சியின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.
மீனாட்சியே சரணம் சரணம்…
அம்மா மதுரை மீனாக்ஷி
அருள்வாய் காஞ்சி காமாட்சி
அன்பாய் எனையே ஆதரித்து
அல்லல் களைந்தே காப்பாற்று
அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உன்சக்தி
வாழ்வைத் தந்து வளம் தந்து
வாழ்க்கைக் கடலின் கரையேற்று
தில்லை சிதம்பரம் பத்தினியே
நெல்லையில் வாழும் பத்தினியே
திருவடி மலரினைத் தொழுதிடுவேன்
திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று
ஓங்காரப் பொருள் நீதானே
உலகம் என்பதும் நீதானே
காணும் இயற்கைக் காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே
அம்மா தாயே உனைவேண்டி
அழுதிடும் என்னைத் தாலாட்டி
அன்புடன் ஞானப் பாலூட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்
உள்ளக் கோயில் உன்கோயில்
உயிரும் மூச்சும் உன் வடிவம்
பேச்சும் செயலும் உன்செயலே
பெருகட்டும் உன் பேரருளே
