Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamஶ்ரீ பாலா திரிபுரசுந்தரி

ஶ்ரீ பாலா திரிபுரசுந்தரி

நாம் வழிபடும் அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று (ஒன்பது வயது ) குழந்தை வடிவமான பாலா திரிபுரசுந்தரி. பாலா திரிபுரசுந்தரியின் பெருமைகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்து கொண்ட வடிவம் தான் இந்த ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி வடிவம்.

பண்டாசுரனை வதம் செய்வதற்காக தோன்றினாள் பாலா தேவி . மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து தோன்றியவன் ” பண்டன் ” எனும் அரக்கன் . ஒரு பெண்ணை தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான் . அந்த சந்தோஷத்தில் தேவர்களையும் ,மற்ற வர்களையும் துன்புறுத்தினான் . அவர்கள் பராசக்தியை சரணடைய , தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள்.

லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள்.ஒரு கையில் அபய முத்திரையுடன் ஜெப மாலையும், புத்தகம் ஏந்தி அருள் புரிகிறாள்.

பாலா என்றால் சிறுமி எனவும் பொருள்படும் .பொதுவாகவே , சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர் . தீய எண்ணங்கள் இருக்காது… அதே போல் சிறுமியாக இருக்கும் இவளும் பேதம் பாராட்டாமல் அருள்வாள். இவளை தியானித்தயுடனே மனதில் பிரசன்னமாவாள்… அன்பு மழை பொழிவாள்…

பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில் முதற்படி என்பர். ஸ்ரீ வித்யையில் “பாலா” மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு “லகு ஸ்ரீ வித்யா” என்றே பெயர் இருக்கிறது. அன்னையை இந்த ரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண பூஜைகள் எல்லாம் இருக்கிறது. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.

அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி என்பர். ஆனால் லலிதோபாக்யானத்தில் பாலா என்னும் சக்தி அன்னையின் ப்ரியத்தை பரிபூரணமாகப் பெற்ற தனி சக்தியாகவே கூறுவர். பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால், பராம்பிகை அனுக்ரஹம் சுலபமாகுமாம்.

ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், ‘நித்ய யெளவனா’ என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள “தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா” என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு இன்னும் சில கோவில்களில் தனி சன்னதி உண்டு, அவை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருக்கடையூர், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகிறது.

சித்தர்கள் சிலரும் இந்த அன்னையை பலவாறாகப் பாடியுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில்,

சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை (1199)
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்

ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை (1073)
நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தானே

என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு

என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். இவர் போன்றே கொங்கண சித்தர் பாடியது வாலைக்கும்மி என்னும் பாடல் தொகுப்பு. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.

முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே (54)
காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம் (57)

இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியது போல, ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்த நிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.

அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலது முறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும். குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர். அம்பிகைக்கு சிறப்பான நாளான இந்த 4ஆம் தைவெள்ளியில் அவளைப் போற்றி வணங்கிடுவோம்

தச மஹாவித்யை தேவியர்கள் 1. காலீ(ளீ) 2. தாராதேவி, 3. திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி தேவி, 4. புவனேஸ்வரி தேவி, 5. பைரவி தேவி, 6. சின்னமாஸ்தா தேவி, 7. தூமவதி தேவி, 8.பகளாமுகி தேவி, 9. மாதங்கி தேவி மற்றும் 10. கமலா தேவி என க்ரந்தங்கள் விளக்குகின்றன!
இவற்றில் மூன்றாவதாக குறிப்பிட்ட திரிபுரசுந்தரி எனும் ஷோடஸி, ஆதி-பரா-சக்தி, மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீ லலிதாம்பா, ராஜராஜேஸ்வரிதேவி, மற்றும் தந்த்ர பார்வதிதேவி எனவும் அறியப்படுகிறது.
குஹ்ய-அதிகுஹ்ய தந்திரம் எனும் நூலில், விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் மூலாதாரமே இந்த தச மஹா வித்யை தேவியர் எனவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
ஷோடஸியாக 16 வயதினளாகவும், 16 பீஜங்கள் கொண்ட மந்திரத்தின் ஸ்வரூபமாகவும், 16 குணமுடையவளாகவும் விளக்கப்படுகிறது. இந்த தேவியை ஆராதிக்கும் முறைக்கே ஸ்ரீவித்யா எனவும், ஆராதிப்பவர் சிவனாக மட்டுமே இருக்கமுடியும் என்றும், அதுவே அம்மனிதரின் கடைசி பிறப்பாகும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இனி ஒரு க்ரந்தத்தில், காமாட்சி அம்மனே சுகுணாத்மிக த்ரிசக்தியாக அவதரித்து தனது திருவாயால் ‘க’ என உச்சரித்து தனது இடது கண்ணிலிருந்து ப்ரம்மனையும், ‘ஆ’ என உச்சரித்து வலது கண்ணிலிருந்து விஷ்ணுவையும், ‘ம’ என உச்சரித்து தனது நெற்றிக்கண்ணிலிருந்து மஹாதேவனையும் குழந்தைகளாக உருவாக்கினாள் என்றும், குழந்தை ப்ரம்மனுக்கு “ஷ்ருஷ்டி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை விஷ்ணுவிற்கு “ஸ்திதி வித்யாத்மிக” க்ஷீரத்தையும், குழந்தை மஹாதேவனுக்கு “லய வித்யாத்மிக” க்ஷீரத்தையும் புகட்டினாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண் என்பதையும், காம என்பதையும் சேர்த்து காமாட்சி என அழைத்தனரோ!
இதே க்ரந்தத்தில் கன்யகா பரமேஸ்வரி தேவியான காமாட்சி, திரிபுரசுந்தரியாக அவதரித்து பந்தகாசுரனை கண்டவுடன் கோபம் கொண்டு அஷ்டதஸ புஜ அல்லது 18 கைகளும் சக்ரம் முதலிய ஆயுதங்களும் தரித்து மும்மூர்த்திகள், தேவர்கள் முன்னிலையில் தனது ஒரு காலை அசுரனின் இதயத்திலும், மற்றொரு காலை அசுரனின் களுத்தினிலும் வைத்து அவனை மிதித்து அவனது தலையை இருகைகளினாலும் பிடித்து க்ஷணத்தில் அவனை அழித்தாள் எனவும், அவனது மகன்கள், உறவுகள் அனைத்தயும் நிர்மூலமாக்கியபின், அசுரனின் உடலை பாலாம்பிகா ரூபத்தில் சர்வாலங்கிருதளாய், இழுத்து வந்தாள் என்கிறது.
இன்னொரு க்ரந்தத்திலோ, அன்னையை நோக்கி பல ரிஷிகள் ஒன்று சேர்ந்து யாகம் செய்தபொழுது, ஹோம அக்னியிலிருந்து பாலா ரூபத்தில் “ஆதிபரை” தர்சனம் கொடுத்து, என்ன வரம் வேண்டும் என கேட்க, ரிஷிகளானவர்கள், அம்பிகையை பலவாரு துதித்து, எங்களுக்கு சம்பூரண அஷ்ட மஹா சித்திகளை அருளவேண்டும் என்றும், அம்பிகையே உன்னை இந்த ரூபத்தில் வழிபடும் யாவர்க்கும் அவர் அவர் கோரியதை அனுக்ரஹிக்க வேண்டும் என வேண்டினராம். “அவ்வாரே” என்று அம்பிகை அருளினாளாம்!
லலிதா ரஹஸ்ய சஹஸ்ரமோ, தனது 965 வது நாமத்தில் “பாலா” எனவும், தனது 966 வது நாமத்தில் லீலாவினோதினி எனவும் பரப்ரம்ம ஸ்வரூபிணியை குழந்தையாக சொல்கிறது. இதன் 74 ஆவது வரியில், பண்டாசுரனின் 30 மகன்களையும் பாலாம்பிகா அழித்தாள் (பண்டபுத்ர வதோத்யுக்தா பாலா விக்ரம நந்திதா) என தெரிவிக்கிறது
இன்னும் பல க்ரந்தங்களில் பாலாம்பிகை வ்ருத்தங்கள் உளது.
இங்கு காரணமாகவே க்ரந்தங்களின் பெயர் வெளியிடவில்லை. இவை எல்லம் விட ஒரு முக்கிய விஷயம் நினைவில் நிற்க!
அன்னை பாலாம்பிகையின் மந்திர சித்தி இல்லாமல், ஸ்ரீ சக்ர உபாஸனை செய்யக்கூடாது என்பது விதியாகும்.

॥ ஶ்ரீபா³லாத்ரிபுரஸுந்த³ரீஅஷ்டோத்தரஶதநாமாவலீ ॥
ஶ்ரீஅருணரூபாயை நம: ।
ஶ்ரீமஹாரூபாயை நம: ।
ஶ்ரீஜ்யோதிரூபாயை நம: ।
ஶ்ரீமஹேஶ்வர்யை நம: ।
ஶ்ரீபார்வத்யை நம: ।
ஶ்ரீவரரூபாயை நம: ।
ஶ்ரீபரப்³ரஹ்மஸ்வரூபிண்யை நம: ।
ஶ்ரீலக்ஷ்ம்யை நம: ।
ஶ்ரீலக்ஷ்மீஸ்வரூபாயை நம: ।
ஶ்ரீலக்ஷஸ்வரூபிண்யை நம: । 10
ஶ்ரீஅலக்ஷஸ்வரூபிண்யை நம: ।
ஶ்ரீகா³யத்ர்யை நம: ।
ஶ்ரீஸாவித்ர்யை நம: ।
ஶ்ரீஸந்த்⁴யாயை நம: ।
ஶ்ரீஸரஸ்வத்யை நம: ।
ஶ்ரீஶ்ருத்யை நம: ।
ஶ்ரீவேத³பீ³ஜாயை நம: ।
ஶ்ரீப்³ரஹ்மபீ³ஜாயை நம: ।
ஶ்ரீவிஶ்வபீ³ஜாயை நம: ।
ஶ்ரீகவிப்ரியாயை நம: । 20
ஶ்ரீஇச்சா²ஶக்த்யை நம: ।
ஶ்ரீக்ரியாஶக்த்யை நம: ।
ஶ்ரீஆத்மஶக்த்யை நம: ।
ஶ்ரீப⁴யங்கர்யை நம: ।
ஶ்ரீகாலிகாயை நம: ।
ஶ்ரீகமலாயை நம: ।
ஶ்ரீகால்யை நம: ।
ஶ்ரீகங்கால்யை நம: ।
ஶ்ரீகாலரூபிண்யை நம: ।
ஶ்ரீஉபஸ்தி²திஸ்வரூபாயை நம: । 30
ஶ்ரீப்ரலயாயை நம: ।
ஶ்ரீலயகாரிண்யை நம: ।
ஶ்ரீஹிங்கு³லாயை நம: ।
ஶ்ரீத்வரிதாயை நம: ।
ஶ்ரீசண்ட்³யை நம: ।
ஶ்ரீசாமுண்டா³யை நம: ।
ஶ்ரீமுண்ட³மாலின்யை நம: ।
ஶ்ரீரேணுகாயை நம: ।
ஶ்ரீப⁴த்³ரகால்யை நம: ।
ஶ்ரீமாதங்க்³யை நம: । 40
ஶ்ரீஶிவாயை நம: ।
ஶ்ரீஶாம்ப⁴வ்யை நம: ।
ஶ்ரீயோகு³லாயை நம: ।
ஶ்ரீமங்க³லாயை நம: ।
ஶ்ரீகௌ³ர்யை நம: ।
ஶ்ரீகி³ரிஜாயை நம: ।
ஶ்ரீகோ³மத்யை நம: ।
ஶ்ரீக³யாயை நம: ।
ஶ்ரீகாமாக்ஷ்யை நம: ।
ஶ்ரீகாமரூபாயை நம: । 50
ஶ்ரீகாமின்யை நம: ।
ஶ்ரீகாமரூபிண்யை நம: ।
ஶ்ரீயோகி³ன்யை நம: ।
ஶ்ரீயோக³ரூபாயை நம: ।
ஶ்ரீயோக³ப்ரியாயை நம: ।
ஶ்ரீஜ்ஞானப்ரீயாயை நம: ।
ஶ்ரீஶிவப்ரீயாயை நம: ।
ஶ்ரீஉமாயை நம: ।
ஶ்ரீகத்யாயன்யை நம: ।
ஶ்ரீசண்ட்³யம்பி³காயை நம: । 60
ஶ்ரீத்ரிபுரஸுந்த³ர்யை நம: ।
ஶ்ரீஅருணாயை நம: ।
ஶ்ரீதருண்யை நம: ।
ஶ்ரீஶாந்தாயை நம: ।
ஶ்ரீஸர்வஸித்³த⁴யே நம: ।
ஶ்ரீஸுமங்க³லாயை நம: ।
ஶ்ரீஶிவாமாத்ரே நம: ।
ஶ்ரீஸித்³தி⁴மாத்ரே நம: ।
ஶ்ரீஸித்³த⁴வித்³யாயை நம: ।
ஶ்ரீஹரிப்ரியாயை நம: । 70
ஶ்ரீபத்³மாவத்யை நம: ।
ஶ்ரீபத்³மவர்ணாயை நம: ।
ஶ்ரீபத்³மாக்ஷ்யை நம: ।
ஶ்ரீபத்³மஸம்ப⁴வாயை நம: ।
ஶ்ரீதா⁴ரிண்யை நம: ।
ஶ்ரீத⁴ரித்ர்யை நம: ।
ஶ்ரீதா⁴த்ர்யை நம: ।
ஶ்ரீஅக³ம்யவஸின்யை நம: ।
ஶ்ரீக³ம்யவாஸின்யை நம: ।
ஶ்ரீவித்³யாவத்யை நம: । 80
ஶ்ரீமந்த்ரஶக்த்யை நம: ।
ஶ்ரீமந்த்ரஸித்³தி⁴பராயண்யை நம: ।
ஶ்ரீவிராட்தா⁴ரிண்யை நம: ।
ஶ்ரீவிதா⁴த்ர்யை நம: ।
ஶ்ரீவாராஹ்யை நம: ।
ஶ்ரீவிஶ்வரூபிண்யை நம: ।
ஶ்ரீபராயை நம: ।
ஶ்ரீபஶ்யாயை நம: ।
ஶ்ரீஅபராயை நம: ।
ஶ்ரீமத்⁴யாயை நம: । 90
ஶ்ரீதி³வ்யவாத³விலாஸின்யை நம: ।
ஶ்ரீனாதா³யை நம: ।
ஶ்ரீபி³ந்த³வே நம: ।
ஶ்ரீகலாயை நம: ।
ஶ்ரீஜ்யோத்யை நம: ।
ஶ்ரீவிஜயாயை நம: ।
ஶ்ரீபு⁴வனேஶ்வர்யை நம: ।
ஶ்ரீஐங்காரிண்யை நம: ।
ஶ்ரீப⁴யங்கர்யை நம: ।
ஶ்ரீக்லீங்கார்யை நம: । 100
ஶ்ரீகமலப்ரியாயை நம: ।
ஶ்ரீஸௌங்கார்யை நம: ।
ஶ்ரீஶிவபத்ன்யை நம: ।
ஶ்ரீபரதத்வப்ரகாஶின்யை நம: ।
ஶ்ரீஹ்ரீங்கார்யை நம: ।
ஶ்ரீஆதி³மாயாயை நம: ।
ஶ்ரீயந்த்ரபராயண்யை நம: ।
ஶ்ரீமூர்திபராயண்யை நம: । 108

பாலாம்பிகா அஷ்டகம்

வேலாதிலங்க்⁴யகருணே விபு³தே⁴ந்த்³ரவந்த்³யே
லீலாவினிர்மிதசராசரஹ்ருʼன்னிவாஸே ।
மாலாகிரீடமணிகுண்ட³ல மண்டி³தாங்கே³
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 1॥

கஞ்ஜாஸனாதி³-மணிமஞ்ஜு-கிரீடகோடி-
ப்ரத்யுப்தரத்ன-ருசிரஞ்ஜித-பாத³பத்³மே ।
மஞ்ஜீரமஞ்ஜுலவினிர்ஜிதஹம்ஸனாதே³
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 2॥

ப்ராலேயபா⁴னுகலிகாகலிதாதிரம்யே
பாதா³க்³ரஜாவலிவினிர்ஜிதமௌக்திகாபே⁴ ।
ப்ராணேஶ்வரி ப்ரமத²லோகபதே: ப்ரக³ல்பே⁴
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 3॥

ஜங்கா⁴தி³பி⁴ர்விஜிதசித்தஜதூணிபா⁴கே³
ரம்பா⁴தி³மார்த³வகரீந்த்³ரகரோருயுக்³மே ।
ஶம்பாஶதாதி⁴கஸமுஜ்வலசேலலீலே
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 4॥

மாணிக்யமௌக்திகவினிர்மிதமேக²லாட்⁴யே
மாயாவிலக்³னவிலஸன்மணி பட்டப³ந்தே⁴ ।
லோலம்ப³ராஜிவிலஸன்னவரோமஜாலே
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 5॥

ந்யக்³ரோத⁴பல்லவதலோத³ரனிம்னனாபே⁴
நிர்தூ⁴தஹாரவிலஸத்குசசக்ரவாகே ।
நிஷ்காதி³மஞ்ஜுமணிபூ⁴ஷணபூ⁴ஷிதாங்கே³
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 6॥

கந்த³ர்பசாபமத³ப⁴ங்க³க்ருʼதாதிரம்யே
ப்⁴ரூவல்லரீவிவித⁴சேஷ்டித ரம்யமானே ।
கந்த³ர்பஸோத³ரஸமாக்ருʼதிபா²லதே³ஶே
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 7॥

முக்தாவலீவிலஸதூ³ர்ஜிதகம்பு³கண்டே²
மந்த³ஸ்மிதானனவினிர்ஜிதசந்த்³ரபி³ம்பே³ ।
ப⁴க்தேஷ்டதா³னனிரதாம்ருʼதபூர்ணத்³ருʼஷ்டே
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 8॥

கர்ணாவலம்பி³மணிகுண்ட³லக³ண்ட³பா⁴கே³
கர்ணாந்ததீ³ர்க⁴னவனீரஜபத்ரனேத்ரே ।
ஸ்வர்ணாயகாதி³மணிமௌக்திகஶோபி⁴னாஸே
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 9॥

லோலம்ப³ராஜிலலிதாலகஜாலஶோபே⁴
மல்லீனவீனகலிகானவகுந்த³ஜாலே ।
பா³லேந்து³மஞ்ஜுலகிரீடவிராஜமானே
பா³லாம்பி³கே மயி நிதே⁴ஹி க்ருʼபாகடாக்ஷம் ॥ 10॥

பா³லாம்பி³கே மஹாராஜ்ஞீ வைத்³யனாத²ப்ரியேஶ்வரீ ।
பாஹி மாமம்ப³ க்ருʼபயா த்வத்பாத³ம் ஶரணம் க³த: ॥ 11॥

॥ இதி ஸ்காந்தே³ வைத்³யனாத²மாஹாத்ம்யே ஶ்ரீபா³லாம்பி³காஷ்டகஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + six =

Most Popular