Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பொருள் விளக்கத்துடன்

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பொருள் விளக்கத்துடன்

ஸஹஸ்ரநாமங்கள் எல்லாமே மந்திரங்கள். அதைப் பாராயணம் செய்கிறோம் அல்லது ஜபிக்கிறோம். பாராயணம் என்பது தினம் ஒரு முறை படிப்பது. திரும்பத்திரும்பக் கூறுதல் ஜபம். இந்த ஜபம் செய்வதற்கு சில நியமங்கள் உண்டு.

எல்லா ஸஹஸ்ரநாமங்களிலும் பூர்வபாகம் முடிந்ததும் இந்த ந்யாஸம் வரும். ந்யாஸம் என்பதற்கு இருத்துதல் என்று பொருள். நாம் பாராயணமோ ஜபமோ செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால், எந்த தேவதையைக் குறித்துப் பாராயணமோ, ஜபமோ செய்கிறோமோ அந்த தேவதையை நம்மில் இருத்துதல்.

மந்திர ஜபத்தின் அங்கங்கள் :

1. ரிஷி – எந்த ரிஷியால் இயற்றப்பட்டது அல்லது முதன்முதலில் கூறப்பட்டது.
‘வஶின்யாதி வாக்தேவதா ரிஷய:’ – வஶினி முதலான வாக்தேவிகளான ரிஷிகள்

2. சந்தஸ் – எந்த சந்தஸில் இயற்றப்பட்டிருக்கிறது – அனுஷ்டுப் சந்த: – அனுஷ்டுப் சந்தம் என்பது 32 அக்ஷரங்களைக் கொண்டது. இந்த ஸஹஸ்ரநாமத்தின் ஸ்லோகங்கள் ஒவ்வொன்றும் 32 அக்ஷரங்களால் ஆனது.

3. தேவதை – எந்த தேவதையைக் குறித்தது – ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரசுந்தரீ தேவதா

4. பீஜம் – பீஜம் என்றால் விதை – அதாவது இந்த மந்திரத்திற்கு ஆதாரமான அக்ஷரம் – ஶ்ரீமத்வாக்பவகூடேதி பீஜம்

5. ஶக்தி – மத்யகூடேதி ஶக்தி:

6. கீலகம் – இதற்கு சாவி அல்லது திறவுகோல் என்று அர்த்தம் கொள்ளலாம் –
ஶக்தி கூடேதி கீலகம்

7. அங்கன்யாஸம்
8. கரந்யாஸம்
9. த்யானம்
10. பஞ்சபூஜை (பஞ்ச உபசார பூஜை)

இதில் அங்கந்யாஸம், கரந்யாஸம் இரண்டும் (குருமுகமாகவே) ஒரு குருவின் மூலமாகவே கற்றுக் கொண்டு செய்தல் வேண்டும். அது அங்கங்களிலும், கரங்களிலும் அந்த தேவதையை இருத்துதல். பஞ்சபூஜை க்ரமத்துடன் (முறையாக) ஜபமாக செய்யும் போது செய்ய வேண்டும்.

ஆகையால் பொதுவாக, நாமாக ஸஹஸ்ரநாமத்தைப் பாராயணம் (படித்தல்) செய்யும் போது கீழ்க்கண்டவாறு சொல்லிவிட்டு த்யான ஸ்லோகத்தைச் சொன்னால் போதுமானது.

(க,ச,ட,த,ப எழுத்துக்களின் உச்சரிப்பு எண்ணையும் எழுதுகிறேன். அதேபோல் ஸ,ஶ,ஷ மூன்றும் வேறு வேறு உச்சரிப்புகள்)

ஓம்
ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம்I
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஶாந்தயேII

(ஶுக்லாம்ப3ரத3ரம் சதுர்பு3ஜம்
வத3னம்
த்4யாயேத்
விக்3னோப)

அஸ்ய ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய
வஶின்யாதி வாக்தேவதா ரிஷய:
அனுஷ்டுப் சந்த:
ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரசுந்தரீ தேவதா
ஶ்ரீமத்வாக்பவகூடேதி பீஜம்
மத்யகூடேதி ஶக்தி:
ஶக்திகூடேதி கீலகம்

(வஶின்யாதி3
வாக்3தே3வதா
தே3வதா
ஶ்ரீமத்3
வாக்3ப4வ
பீ3ஜம்
மத்3ய)

ஸங்கல்பம் :

மம தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பலபுருஷார்த்த ஸித்த்யர்த்தே, இஷ்டகாம்யார்த்த ஸித்த்யர்த்தே ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரசுந்தரீ ப்ரீத்யர்த்தே, ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பாராயணே விநியோக :

த4ர்மார்த்த
சதுர்வித3
ப2லபுருஷார்த்த
ஸித்3த்4யர்த்தே
ப்ரீத்யர்த்தே
விநியோக3:

(ஸங்கல்பம் சொல்லும் போது நம் மனதில் என்ன வேண்டுதலோ அதைச் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தை வேண்டி நான் பாராயணம் செய்கிறேன் என்று விண்ணப்பித்து விட்டு சொல்ல வேண்டும். எந்த தனிப்பட்ட விண்ணப்பமும் இல்லையென்றால் இந்த பொது ஸங்கல்பமே போதுமானது. அதிலேயே நமக்குப் பொதுவான தேவைகள் எல்லாம் அடங்கி விடுகிறது.)

த்யான ஸ்லோகம் அர்த்தத்துடன் நாளை…..

ஸ்ரீ மாத்ரே நமஹ…..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 4 =

Most Popular