வெற்றி தேடி தரும் ஸ்வஸ்திக்!
வெற்றியைத் தேடி தருவது ஸ்வஸ்திக் சின்னமாகும். கடவுளின் கைகளில் ஸ்வஸ்திக் சின்னம் இருப்பதை பலரும் பார்த்திருப்போம். விநாயகர் கைகளில் மங்கள சின்னமான ஸ்வஸ்திக் திகழ்கிறது. செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். இதனை பூஜையறை வாசலில் கோலமாக இடுவர். வீட்டு நிலையில் மஞ்சள் குங்குமம் கொண்டு இதை வரைவதுண்டு.
ஸ்வஸ்திக் என்பதற்கு தடையற்ற நல்வாழ்வு என்று பொருள். இந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் உள்ள 8 கோடுகள் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு என்று 8 திசைகளை குறிக்கிறது. 8 திசைகளிலும் நாம் தொடங்கும் செயல் எந்தவித தடையுமின்றி இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் அர்த்தம்.
வெற்றிக்கு எட்டுத் திசைகளிலும், நாம் தொடங்கும் செயல் எவ்வித தீங்கும் நேராமல் இறையருளுடன் இனிதே நிறைவேற வேண்டும் என்பது இதன் தாத்பர்யம். விஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரம், ஸ்வஸ்திக் வடிவில் இருப்பதாகச் சொல்வதுண்டு. சூரிய வழிபாட்டிலும் இது இடம் பெற்றிருந்தது. ஸ்வஸ்திக் கோலம் ஏ ந் போடுகிறார்கள் தெரியுமா?
ஸ்வஸ்திக் சின்னத்தில் நடுவில் வைக்கப்படும் புள்ளியானது நம் ஆத்மாவை குறிக்கிறது.வீட்டில் உள்ளவர் ஆத்மா அனைத்து திசைகளிலும் உள்ள தெய்வங்களை நோக்கி பிராத்தனை செய்து கொண்டே இருக்கட்டும் என்பதற்காகவே ஸ்வஸ்திக் கோலம் போடப்படுகிறது.
ஸ்வஸ்திக் எடுத்துக்காட்டுவது என்ன?
நான்கு வேதம் —– ரிக், யசுர், சாம, அதர்வண
நான்கு திசை —-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
நான்கு யுகங்கள் —சத்ய, த்ரேதா, துலாபார, கலியுக
நான்கு ஜாதிகள் —பிராமண, ஷத்ரிய, வைஷ்ய, சூத்திர
நான்கு யோகங்கள்—ஞான, பக்தி, கர்ம, ராஜ
நான்கு மூலங்கள் —ஆகாயம், வாயு, நீர், நிலம்
வாழ்க்கையின் நான்கு பருவங்கள் —குழந்தை, பிரம்மச்சரியம், கிரஹஸ்தர், சந்நியாசி ஸ்வஸ்திக், ஓம், திரிசூலம் போன்றவற்றை வாசல் கதவின் உள்பக்கமோ, வெளிப்பக்கமோ ஒட்டி வைத்தால் அது வீட்டினுள் துஷ்டசக்தியை நுழையவிடாமல் காக்கும். இந்த சின்னங்களை காலில் மிதிப்படாத இடங்களில் போடுவது நன்மை உண்டாகும். நன்மை தரக்கூடிய கோலங்களை பூஜையறையில் போட்டு பலன் பெறவேண்டும். உங்கள் மனதை சந்தோஷமாக வைத்து, பிறரையும் சந்தோஷப்படுத்தி வாழ்வில் எல்லா வளங்களையும் பெறவும்.
