Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamமாபெரும் வெற்றி பெற பிரம்ம முகூர்த்த ரகசியம்!

மாபெரும் வெற்றி பெற பிரம்ம முகூர்த்த ரகசியம்!

மாபெரும் வெற்றி பெற பிரம்ம முகூர்த்த ரகசியம்!

நினைத்த காரியம் நிறைவேற லட்சுமி கடாட்சம் நிறைந்த இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை பயன்படுத்தலாம். இதற்கு எந்த தோஷமும் கிடையாது. பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து குளித்து முடித்து பூஜையறையில் விளக்கேற்றி வைத்து எந்த வேலையை செய்தாலும் வெற்றி தான். பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம், வீடு கிரகப்பிரவேசம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சூரிய உதயத்திற்கு முன்புள்ள பொழுது உஷத் காலம் எனப்படும். இந்த நேரத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவன், பார்வதி தேவியும், மகாலட்சுமி ஆகிய தெய்வங்கள் வான் வெளியில் சஞ்சரிப்பதாக ஐதீகம். அப்படி அவர்கள் சஞ்சரிக்கும் இந்த அதிகாலை பொழுதில் தூங்க கூடாது. அந்த நேரங்களில் தியானம், வழிபாடு தான் செய்ய வேண்டும்.

நாள்தோறும் அதிகாலையில் எழும் பழக்கத்தை கடைபிடித்தால் வாழ்வில் ஒவ்வொரு நாளும் வெற்றி தான். பெரும்பாலும், வயதான பெரியவர்கள் அதிகாலையில் எழுந்து நடைபயிற்சியை மேற்கொள்ளும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். வேலை செய்யும் போது வேலை செய்ய வேண்டும், தூங்கும் நேரத்தில் தூங்க வெண்டும். அதிகாலையில் எழுந்து இறைவனிடம் வைக்கும் எல்லா வேண்டுதலும் நிறைவேறும்.

வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இக்கதிர்கள் நம் உடலில் படும்போது நரம்புகள் புது தன்மை பெறுகின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால்தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

நமது மனதில் இருக்கும் எண்ணங்களை இறைவனிடம் எடுத்து வைப்பதற்கான நேரம்தான் இந்த பிரம்ம முகூர்த்தம். உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும். ஆரம்பம் சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும். ஆரம்பிக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தமாக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும். ஆகையால் விடியற்காலையில் எழுந்து சூரியன் உதயமாகும் போது ஏற்படும் கதிர்களின் ஆற்றலை பெற்று உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெரும் வாழ்க்கையை பெறுவோம்.

திருமணத்திற்கான சுப முகூர்த்தம், மைத்ர முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், கோதூளி முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், சன்னியாச முகூர்த்தம் என்பது போன்ற முகூர்த்தங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால், பைரவ முகூர்த்தம் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதென்ன பைரவ முகூர்த்தம் என்று தானே நினைக்கிறீர்கள்!…

ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று எடுத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 7 =

Most Popular