Saturday, November 4, 2023
HomeArthamulla Aanmeegamவிமானிகா சாஸ்திரம்

விமானிகா சாஸ்திரம்

சரி விமானிகா சாஸ்திரம் படி பார்த்தால் அந்த காலத்தில் விமானம் அத்தனை சாதாரணமான ஒன்றா…

ஆம் உண்மை தான் பல இடங்களில் மிகவும் இயல்பாக விமானம் குறிப்பிடப்பட்டுள்ளது

இராமாயணத்தில் புஷ்பக விமானம் முக்கியமான ஒன்று ஆகும் அது இல்லாமல் இலங்கையின் தளபதிகள் கூட பறக்கும் ரதங்களை வைத்திருந்தனர்

இராவணன் புதல்வனான இந்திரஜித்தோ போருக்கு செல்வதற்கு முன் பிரம்மாஸ்த்திரம் கொண்டு தனது ரதத்திற்கு சக்தி கொடுத்து பின் கண்ணிற்கு தெரியாமல் மறைந்து வானில் இருந்து வானரப்படையை தாக்குகின்றான்

அர்ஜுனன் வானுலகு செல்வதற்கு மாதலி கொண்டுவந்த ரதம்

சால்வனின் சௌப விமானம்

கடோத்கசனின் ரதம்

என மஹாபாரதத்தில் மட்டும் மொத்தம் 41 இடங்களில் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது

புராணங்களில் எண்ணிக்கையே இல்லாத அளவு சொல்லப்பட்டுள்ளது

இவ்வளவு ஏன் நமது தமிழ்நூல்களிலே கூட

புறநானூற்றில் உள்ள ” வலவன் ஏவா வானூர்தி ”

சீவக சிந்தாமணியில் உள்ள ” மயிற்பொறி ”

திருவிளையாடல் புராணத்தில் சோமவார விரதத்தை கடைபிடித்ததால் ” சேர, சோழ, பாண்டியர்கள் இந்திரலோகம் சென்ற விமானம் ”

அழகர் கோவிலின் மேல் பறக்க முடியாமல் இறங்கிய ” மலையத்துவஜ பாண்டியனின் விமானம் ”

என விமானங்கள் கூறப்பட்டுள்ள இடங்கள் பல

அவ்வாறு

அக்னிஹோத்திர விமானம் அதாவது இரண்டு இஞ்சின்களை கொண்டது

கஜ விமானம் பல இஞ்சின்களை கொண்டது

மேலும் விமானங்களை ஒவ்வொரு பறவை அல்லது விலங்குகளின் பெயரை கொண்டு வகைப்படுத்தினர்

ஒரு வேளை தேவர்கள் பறக்கும் தன்மையுடைய ஆடு, மான், யானையை வாகனமாக கொண்டிருந்தனர் என்பது இத்தகைய விமானங்களையே குறிக்க வேண்டும் என இதை ஆராய்ந்தவர்கள் கூறுகின்றன

வானில் மட்டுமில்லாமல் நிலத்தில் ஓடக்கூடியதும் நீரில் மிதக்கும் கப்பலாகவும் இருந்த விமானங்களும் உண்டு

இவையில்லாமல் நிலத்திலும் நீரிலும் மட்டும் செல்லும் வாகனமும்

வானிலும் நீரிலும் மட்டும் செல்லும் வாகனமும் தனியே இருந்துள்ளதாக ரிக் வேத குறிப்புகள் உரைக்கின்றன

யஜுர் வேதமும் இதை ஆமோதிக்கிறது

மேலும் யந்திர சர்வாஸ்வம் ஆயிரத்திற்கும் மேலான வாகன வகைகளை உரைக்கிறது

12-ம் நூற்றாண்டில் கிடைத்த குறிப்பின் படி மொத்தம் 42 வகையான தொழில்நுட்ப நூல்கள் சனாதன தர்மத்தில் இருந்தன ஆனால் நமக்கு கிட்டியது விமானிகா சாஸ்திரம் மட்டுமே

இவையில்லாமல் அகஸ்திய சம்ஹிதாவில் தனியே இரண்டு விமானங்களை உரைக்கிறார் அகஸ்தியர்

அவைகள் பரத்வாஜர் குறிப்பிட்டது போல நவீனமானது இல்லையென்றாலும் அருகில் உள்ள இடங்களுக்கு செல்லும் சிறியரக விமானங்கள்

இதில் ஒரு வகை கிட்டதட்ட பலூன் வகையை சேர்ந்த அது ஹைட்ரஜனை கொண்டு இயங்குவதாகவும் தண்ணீரிலிருந்து எப்படி தனியே ஹைட்ரஜனை பிரிக்கமுடியும் என தனியே அகஸ்தியர் குறிப்பிட்டு உள்ளார்

அடுத்து போஜ மன்னன் எழுதிய சமரங்கன சூத்ரதாராவில் இரண்டு விமானங்களை குறிப்பிடுகிறார்

ஒன்று பறவை போல இறக்கை கொண்டு பாதரசத்தை வைத்து இயங்குகிறது இன்னொன்று கோவிலில் உள்ள விமான வகை போல உருவிலும் அதீத சக்தியுடனும் இயங்குகிறது

போஜமன்னன் குறிப்பிடுகையில் விமானம் கிளம்புகையில் வரும் சத்தம் யானைகளை மிரள வைக்கிறது என விளக்குகிறார் அவ்வாறே கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் போர்க்களத்தில் யானைகளை பயமுறுத்த உபயோகிக்கும் ஹஸ்டி யந்திரமும் இவ்வகையை சார்ந்தது

சில ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் கண்டெடுத்த சில சமஸ்கிருத குறிப்புகளை மொழிமாற்றம் செய்ய சண்டிகர் பல்கலைகழகத்திற்கு அனுப்பினர் அதை ஆராய்ந்த Dr. Ruth Reyna அது பல கிரகங்களுக்கு செல்லும் விமானம் பற்றிய குறிப்புகள் என சீனர்களுக்கே அனுப்பினர் அதை அவர்கள் தங்கள் பாடத்தில் இணைத்தனர்

(Ref : The Anti-Gravity Handbook)

ஆப்கானிஸ்தானில் கூட சில ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு விமானம் குகைக்குள் இருந்ததாக தகவல்கள் வெளிவந்தன

(Vimana found என கூகுளில் தேடவும்)

இனி விமானிகா சாஸ்திரத்தை பற்றிய சில அறிவியல் தகவல்களை கடைசி பதிவில் காணலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =

Most Popular