பசு மாட்டு சீம்பாலில் இத்தனை நன்மைகளா?

103
பசுமாட்டு சீம்பாலில் இத்தனை நன்மைகளா?

பசு மாட்டு சீம்பாலில் இத்தனை நன்மைகளா?

சீம்பால் என்றால் என்ன?

நம் உடலுக்கு அவசியமான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிக போசாக்கையும் செறிந்து இருக்கும் இந்த சீம்பால் மாடு கன்று ஈன்ற பின்னர் கிடைக்கும். இதனைபயன்படுத்தி பால்கோவா செய்து உண்ணலாம் மற்றும் சீம்பால் பருகுவதால் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சீம்பாலில் பார்க்கும் பொழுது மற்ற பாலில் கிடைக்கும் போஷாக்கை விட இதில் அதிகமே. சீம்பாலில் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்று நாம் தெரிந்து கொள்வோம்.

மலச்சிக்கல் பிரச்சனைகளை சுலபமாக குணமாக்கும் ஒரு அற்புத பொருள் இந்த சீம்பால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ஆசையாக சாப்பிடும் முறையில் சீம்பாலுடன் நாட்டு வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து கொடுக்க ருஷியாக இருக்கும்.

உடல் ஆரோக்கியமும் சரும பராமரிப்புக்கு உதவும் சீம்பால்:

சீம்பாலில் உள்ள புரதம் – வைட்டமின்கள் – கால்சியம் போன்றவை செறிந்து இருப்பதால் வயதானவர்கள் சீம்பால் அதிகம் பருகினால் அவர்களின் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் கோடுகள் மறையும். இளமையான ஒரு தோற்றத்தை பெறலாம். அவர்களுக்கு ஏற்படும். மூட்டு வலி மற்றும் எலும்புகளில் ஏற்படும் உபாதைகள் , கால்சியம் குறைபாட்டால் வரும் வியாதிகளை தடுக்கும். உடல் சோர்வை நீக்கும் விதமாக, இந்த சீம்பாலை பருகலாம்.

நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவும் சீம்பால்:

அதிகமாக கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், சீம்பாலை பருகி அவர்களின் உடல் செயல் திறனுக்கு துணையாக இருக்கும். கடினமான சாப்பாடுகளை சாப்பிட்ட பின்னர், அவை செரிக்க உதவும் வகையில் சீம்பால் பயன்படுகின்றது. விரைவில் உணவுகள் ஜீரணமடைந்து நீண்ட நேர உடல் உழைப்புக்கு உதவுகின்றது.

மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கும்:

சீம்பால் மூலம் மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. மேலும், இதிலுள்ள நோய் எதிர்ப்பு புரதப்பொருட்கள் கன்றின் தொண்டை, நுரையீரல் மற்றும் குடல்களைப் பாதுகாக்கின்றன. சில நன்மைபயக்கும் கோலுரு நுண்ணுயிர்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. இதன் நோய் எதிர்ப்புப் பண்பின் காரணமாக, பசுவின் சீம்பாலை சமைத்து உட்கொள்கின்றனர்.

மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்:

மலச்சிக்கல் பிரச்சனைகளை சுலபமாக குணமாக்கும் ஒரு அற்புத பொருள் சீம்பால். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் ஆசையாக சாப்பிடும் முறையில் சீம்பாலுடன் நாட்டு வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடுவதால் மிகவும் ருசியாக இருக்கும்.