தை அமாவாசைக்கு இத்தனை சிறப்புகள் உள்ளதா?

68

தை அமாவாசைக்கு இத்தனை சிறப்புகள் உள்ளதா?

அமாவாசை நாளின் சிறப்பு:

முதலில் அம்மாவாசை என்றாலே அது கெட்ட நாள் என்று சிலர் மனதில் உள்ள எண்ணங்கள் தோன்றும். இதை முதலில் மாற்றிக் கொள்ளவேண்டும். அம்மாவாசை நாள் போல் ஒரு உகந்த நாள் இருக்காது. அப்படி வரும் அம்மாவாசைகளிலே ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகளாய அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்கள் போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நாம் வருட முழுவதும் வரும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசை நாட்களில் விரதம் இருந்து பித்ருகளை வழிபாடு செய்தாலே போதும் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.

தை அமாவாசை:

இந்த ஆண்டு தை அமாவாசை ஆனது நாளை வருகிறது. அதாவது, ஜனவரி 21 ஆம் தேதி சனிக்கிழமை அன்றைய தினம் வருகிறது. அன்று அமாவாசை திதியானது அதிகாலை 4:25 மணிக்கு துவங்கி அடுத்த நாள் ஜனவரி 22ஆம் தேதி அதிகாலை 3.20 வரை உள்ளது. இந்த தை அமாவாசை திதி காலையிலே துவங்கி விடுவதால் காலையிலேயே நீராடி உங்கள் முன்னோர்களை மற்றும் பித்ருக்களை வழிபடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த அமாவாசையின் சிறப்புகள் பற்றி நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

தை அமாவாசையின் சிறப்பு:

இந்த தை அமாவாசையின் சிறப்பு என்னவென்றால், புரட்டாசி மகளாய அமாவாசை அன்று நாம் விரதம் இருந்து பித்ருக்களை வழிபடுவதன் மூலம் நம் முன்னோர்களான பித்ருக்கள் பூலோகம் வந்து மகளாய ஒத்த காலத்தில் தங்கி இருந்து நமக்கு அருள் புரிவார்கள். அதே போல் தை அமாவாசை அன்றும் விரதம் இருந்து சிரார்த்தகளை வழிபட்டு தர்ப்பணம் கொடுக்கும் தன் சந்ததிகளுக்கு அருள் வழங்கி பித்ரு லோகம் திரும்புவார்கள்.

தர்ப்பணம் என்றால் என்ன?

அது என்ன தர்ப்பணம் என்று சொல்கிறார்கள். அது என்னவென்றால், அமாவாசை தினங்களில் நாம் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் சேர்த்து செய்யும் வழிபாடு தான் தர்ப்பணம் என்று சொல்கிறார்கள். இதை ஒவ்வொருவரும் அமாவாசை தினத்தன்று நாம் செய்யலாம் இப்படி தர்ப்பணம் செய்து முடித்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படையல் படைத்துவிட்டு சாப்பிடுவது மற்றும் பசு மாட்டுக்கு அகத்திக்கீரை அல்லது அரசி கலந்த உணவை அளிப்பது போன்ற சடங்குகள் எல்லாம் தர்ப்பணத்தில் உள்ளனர்.

சிரார்த்தம்:

ஒருவர் இறந்த நாளில் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும் அவர் இறந்த அதே நாட்களில் வரும் திதியில் நம் வீட்டில் அல்லது கோயில் சென்று வழிபாடுகள் நடத்தி செய்வது சிரார்த்தம் எனப்படுவது. இதில் பிண்டம் வைத்து வழிபடுவது சிறப்பான ஒன்று ஆகும்.

தர்ப்பணம் எபொழுது கொடுக்கலாம்:

ஜனவரி 21ஆம் தேதி தை அமாவாசை தினத்தில் அன்று முழுவதும் அமாவாசை திதி இருந்தாலும் காலை பொழுது நீங்கள் குளித்துவிட்டு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன் சிராத்தர்களின் காரியங்களை எல்லாம் நிறைவேற்றி எள்ளும் தண்ணீரும் கலத்து காகத்திற்கு உணவு வைக்க வேண்டும். சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தர்ப்பணம் எக்காரணம் கொண்டு கொடுக்க கூடாது.
தர்ப்பணம் எங்கே கொடுக்கலாம்:

இப்படி இந்த தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பவர்கள் எங்கு வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் என்ற கேள்வி எழுகிறதல்லவா. அப்படி முன்னோர்களுக்கு இந்த தை அமாவாசை தர்ப்பணம் கொடுப்பவர்கள் உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர்நிலைகள், ஆறு, நதிக்கரையில் வைத்து தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

யார் தர்ப்பணம் கொடுக்கலாம்:

யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது தெரியுமா தாய், தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள் ஆனால் கணவர் இல்லாத பெண்கள் இது போன்ற நேரத்தில் இந்த முறையை மேற்கொள்ள வேண்டும் என்று, சாஸ்திரங்கள் கூறுகின்றனர்.