Tuesday, October 17, 2023
HomeArthamulla Aanmeegamதத்தனூர் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் சிறப்புகள்!

தத்தனூர் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் சிறப்புகள்!

தத்தனூர் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் சிறப்புகள்!

ஸ்ரீ பெரும்புதூர் – செங்கல்பட்டு நெடுஞ்சலையில் சுமார் 6 கிமீ தொலைவில் பாதிரிமேடு என்ற இடத்திலிருந்து பிரிந்து செல்லும் கிளை சாலையிலிருந்து ஒரு கிமீ தூரத்தில் தத்தனூர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சிவபெருமானைப் போன்று நெற்றிக் கண்ணும், மகா விஷ்ணுவை போன்று சங்க சக்கரமும் உடைய ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரின் அபூர்வ கோலமானது தத்தனூர் என்ற ஊரில் உள்ளது.

இதையும் பாருங்கள்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் – வீடியோ!

ஸ்ரீ ஆஞ்சநேயர் ராம பக்தன். தமிழகத்தில் இவருக்கு கோயில் இல்லாத ஊரே கிடையாது என்று கூட சொல்லலாம். ஆனால், அவர் ஐந்து முகம் கொண்ட மூர்த்தியாக உள்ள கோயில்கள் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒன்று தான் தத்தனூர் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்.

இந்தக் கோயில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஸ்ரீ கருடன், ஸ்ரீ வராகம், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஹயக்ரீவர் ஆகிய 5 முகங்களோடு நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பஞ்சமுகத்தின் சிறப்பு:

ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரின் திருமுகங்களும், அதன் சிறப்பம்சங்களும்:

1. ஸ்ரீ கருடன்: நோய் நீக்குதல், தீராத பிணி, விஷக்கடி நீங்குதல்.
2. ஸ்ரீ வராகம்: குடும்பத்தில் வளம், சுபகாரியங்கள் தடையின்றி நடத்தல், வேலை வாய்ப்பு, முன்னேற்றம், சந்தான பிராப்தி.
3. ஸ்ரீ ஆஞ்சநேயர்: நெற்றி கண்ணுடன், ருத்திராவதார மூர்த்தியாய், எதிரிகளை அழிக்கும் தன்மை பெற்றவராய், ஆக்கிரோஷமாக விளங்குகிறார்.
4. ஸ்ரீ நரசிம்மர்: செய்வினை, பில்லி, சூனியம், இவைகள் நீங்குதல்.
5. ஸ்ரீ ஹயக்ரீவர் (குதிரை முகம் கொண்ட விஷ்ணுவின் அம்சம்): கல்வியில் முன்னேற்றம், ஞாபகத் திறன் அதிகரித்தல், வாக்கு வன்மை, புத்தி சாதுர்யம், மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை போன்றவை கிடைக்கும்.

இந்த வீடியோவையும் பாருங்கள்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்!

இங்குள்ள மூர்த்திக்கு சிவபெருமானைப் போன்று நெற்றியில் மூன்றாவது கண் இருப்பதும், இவரது வலது, இடது கரங்களில் மகா விஷ்ணுவைப் போன்று சங்கு சக்கரம் ஏந்தி இருப்பதும், வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத அபூர்வக் கோலமாகும்.

மே மாதத்திற்கான ராசி பலன்கள் – 12 ராசிகளின் வீடியோ!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =

Most Popular