கலியுக முடிவு பற்றி லிங்க புராணம் என்ன சொல்கிறது?
கலியுக முடிவு பற்றி லிங்க புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்:
- திருடர்கள் மன்னர்களாக ஆகிவிடுவார்கள். மன்னர்கள் திருடர்களாக மாறிவிடுவார்கள். இது தான் நடக்கும்.
- மக்களின் சொத்துக்களை ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்து அதைக் கெட்ட வழியில் செலவிடுவர்கள். மக்கள் கொடுமைப்படுத்தப்படுவார்கள்.
- கொஞ்சம் படித்த அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் பெரிய சாமியார்களாகக் கருதப்படுவர். ஒழுக்கம் இன்மை ஏற்படும்.
- நிறைய நாடோடிகள் நாடு நாடாகச் செல்வார்கள்.
- கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், தாய்மார்களின் கர்ப்பத்திலேயே கருக்கள் அழிக்கப்படும்.
- கோர மிருகங்களின் தொல்லைகள் அதிகரிக்கும்.
- மக்கள் தவறான முடிவுகளுக்கு ஜே போடுவார்கள்
- யாரையும் நம்பமாட்டார்கள். பொறாமை அதிகரிக்கும்.
- வாழும் ஆயுட்காலம் குறையும். பலரும் 16 வயதிலேயே இறக்கும் நிலை ஏற்படும்.
- பசி, பிணி ஆகியவற்றால் கஷ்டப்படுபவர்கள் பூமிக்கடியில் வசிப்பார்கள்.
- இளம் பெண்கள் கற்பை விலை பேசுவார்கள்.
- மழைக்கான அதிபதி வருண பகவான் கண்ட இடங்களில் மழை பெய்யச் செய்வான்.
- கடை வைத்திருப்பவர்கள் கொள்ளை லாபம் அடிப்பார்கள்.
- தவறான மொழிகள் பயன்படுத்தப்படும். பேசும் வார்த்தையில் தவறு ஏற்படும்.
- வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பிச்சைக்காரர்களும் அதிகரிப்பார்கள்.
- ஆட்சியாளர்கள் மக்களின் வரிப்பணத்தை பறிப்பதலேயே குறியாக இருப்பார்கள். அரசு அதிகாரிகள் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது.
- பணத்தின் மீதே குறியாக இருப்பார்கள். பணக்காரர்களின் கை ஓங்கும். அரசு அதிகாரிகள் அவர்களது பேச்சை தான் கேட்பார்கள்.
- தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
- கெட்டுப்போன உணவுப் பொருட்களும், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் விற்கப்படும்.
- சிறுமிகள் சீர்குலைக்கப்படுவார்கள்.
- ரௌடிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
- பணத்திற்கு அடிமையாகும் நிலை உருவாகும். லஞ்சம், ஊழல் அதிகரிக்கும்.
- விலங்குகள் சித்திரவதை செய்யப்படுவது அதிகரிக்கும்.
- கல்லூரிகளில் பெண்கள் துன்புறுத்தப்படுவது கூடும்.
- தாய்மார்கள் கொடுமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
- திருடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்பே லிங்க புராணம் எழுதப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. அப்போதே இப்படி உலகம் சீரழிந்ரது போகும் என்று எப்படி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்? அப்போது வாழ்ந்த ஞானிகளின் த்ரிகால ஞானம் முக்காலப் பார்வை என்று சொல்ல வேண்டும்.
