Monday, October 23, 2023
HomeArthamulla Aanmeegamஞான திருஷ்டி என்றால் என்ன?

ஞான திருஷ்டி என்றால் என்ன?

ஞான திருஷ்டி என்றால் என்ன?

உண்மையான ஞான திருஷ்டின்னா சும்மா இருக்கறதுதான்.
அதுல என்ன கஷ்டம்?
ஒரு கோவிலுக்கு புதுசா ஒரு நிர்வாகி வந்தார் கணக்கு வழக்கெல்லாம் கவனிச்சார் அதுல சும்மா இருக்கறவர்க்கு ஒரு பட்டை சாதம்ன்னு எழுதி இருந்தது. இது என்னன்னு விசாரிச்சார். இது ப்ரசாதத்தை யார் யாருக்கு கொடுக்கறோம்ன்னு பட்டியல் போட்டு இருக்கோம்ன்னு சொன்னார்

சும்மா இருக்கிறவர்னு போட்டு இருக்கே அவர் வேலை ஒண்ணும் செய்ய மாட்டாரா?
ஆமாம் அவர் சும்மா ஒரு தூண்ல சாய்ந்து உட்கார்ந்து இருப்பார் அப்ப அவருக்கு எதுக்கு சாப்பாடு இனிமே கொடுக்காதீங்க வேற வழியில்லை அடுத்த நாள் அந்த நபருக்கு சாப்பாட்டுப் பட்டை கிடைக்கவில்லை. அந்தப்பக்கம் போன ஆசாமியை ஏன்னு விசாரிச்சார். புது மணியக்காரர் உத்திரவுன்னாங்க ஓ அப்டியா அவரை இங்க கொஞ்சம் வரச்சொல்ல முடியுமான்னு கேட்டார் இதோ தற்செயலா அவரே வருகிறார் கேட்டுக்கோங்கன்னு சொன்னார்.

நீங்கதான் எனக்கு சாப்பாடு கொடுக்க வேணாம்ன்னு சொன்னீர்களா? ஆமாம் சும்மா உட்கார்ந்து இருக்க எதுக்கு சாப்பாடு? சும்மா உட்கார்ந்து பாத்தால் புரியும். அதுல என்ன கஷ்டம் என்று சரி இங்க இந்த தூண்ல சாய்ந்து கொண்டு ஒரு அரை மணி நேரம் சும்மா இருங்கள் பார்க்கலாம் ஒரு அசைவும் இருக்கக்கூடாது ஒண்ணும் பேசக் கூடாது சைகை காட்டக் கூடாது என்று கூறினார் இதில் என்ன கஷ்டம்ன்னு மணியக்காரர் உட்கார்ந்தார் 15 நிமிஷத்துக்கு மேல உட்கார முடியலை எழுந்துட்டார் இவருக்கு இனிமேல் ரெண்டு பட்டை பிரசாதம் கொடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்.

தமாஷான கதை தான் என்றாலும் சும்மா இருக்கறதை போல கஷ்டமானது ஒண்ணுமில்லை. என்ன நடந்தாலும் எதிர்வினை இல்லாமல் எப்படி இருக்க முடியும்?
மனசுல எண்ணங்கள் ஓடுகிற வரை அவை ஏதேனும் ஒரு செயலை தூண்டி கொண்டேதான் இருக்கும்.

உடம்பால சும்மா இருக்க முடிஞ்சாலும் மனசால சும்மா இருக்கணுமே அது முடியுமா? கடந்த காலத்தை நினைச்சு அசை போட்டு திருப்பித்திருப்பி நடந்து முடிஞ்சு போன சமாசாரங்களுக்கு எல்லாம் வருத்தப்படுகிறது கோபப்படுகிறது இப்படி எத்தனை வீணான காரியம் எல்லாம் செய்கிறோம். கடந்த காலம் பத்தி இல்லைன்னா எதிர் காலத்தை பத்திய பயம் பொழுது விடிஞ்சு படுக்கையை விட்டு எழுந்திருப்போமான்னு கூட நிச்சயமா சொல்ல முடியாது மேலும் இப்பவே ரெண்டு வயசு மூணு வயசா இருக்கிற குழந்தையோட கல்யாணத்தைப்பத்தி கவலை படுவோம்.

எது வேணும்னாலும் நடக்கட்டுமே அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு யாரால சும்மா பார்த்துண்டு மட்டும் இருக்க முடிகிறதோ அவங்களுக்கு மட்டுமே
மற்றவர்கள் மனதில் என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியும்.
எதிர் காலத்துல என்ன நடக்கும்ன்னு தெரியும் கடந்த கால ரகசியங்கள் எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்

எங்கேயோ தூர தேசத்தில என்ன நடக்குதுறதுன்னு இங்கிருந்தே சொல்ல முடியும்
இப்படி சும்மா இருக்கறது என்பது ரொம்ப ரொம்பவே கஷ்டம் அப்படி இருக்கறவர்களுக்கு மட்டுமே ஞானம் பொருந்திய திருஷ்டி இருக்குன்னு அர்த்தம் !!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − nine =

Most Popular