எந்தெந்த கிழமைகளில் கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

56

எந்தெந்த கிழமைகளில் கிரிவலம் சுற்றினால் என்ன பலன்?

 1. ஞாயிற்றுக்கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்.
 2. திங்கள் கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
 3. செவ்வாய் கிழமை சுற்றினால் கடன், வறுமை நீங்கும். தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளை நீக்கி சுபிட்சும் பெறலாம்.
 4. புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும்.
 5. வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.
 6. வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.
 7. சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரகங்களை வழிப்பட்டதன் பயன் கிடைக்கும்.
 8. நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி கிரிவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.
 9. அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும்.
  மனம் நிம்மதி அடையும்.

கிரி வலம் வரும் பக்தர்கள் அன்றைக்கு பெண்களை நினைக்காமலும், அவர்களோடு சேராமலும், நீரில் மூழ்கி, தூய்மையான ஆடையை உடுத்திகொண்டு விபூதி அணிந்து, தானம் தாம் கொடுத்து ஒருவரிடத்தும் தானம் வாங்காமல் காலினால் நடந்து வரவேண்டும். மலையை சுற்றி இருக்கின்ற தேவர்களையும் முனிவர்களையும் வணங்கி சட்டையும், போர்வையும் நீக்கி குடை பிடியாமல், பயம், கோபம், சோகம், இவற்றை நீக்கி, தாம்பூலம் தரிக்காமல், சிந்தையை சிவன்பால் செலுத்தி வலம் வரவேண்டும்.

நம் மனதில் கோபம், க்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் எனக் கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள்.

தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான்.

அண்ணாமலையில் வாழ்ந்து முக்தி பெற்ற மகான்கள்

1. குகை நமச்சிவாய தேவர்
2. குகை நமச்சிவாய சுவாமிகள்
3. அருணகிரி நாதர்
4. திருவண்ணாமலை தின நுமுதல் குருமூர்த்தி
5. தேசிகப் பரமாசாரிய சுவாமி
6. பாணி பத்திர சுவாமி
7. அன்னை மங்கையர்க்கரசியார்
8. சோணாசல் தேவர்
9. ஞானப்பிரகாசர்
10. வீர வைராக்கிய மூர்த்தி சுவாமி
11. அப்பைய தீட்சிதர்
12. சிவப்பிரகாசர்
13. ஞானியாரடிகள்
14. தட்சிணாமூர்த்தி சுவாமி
15. குமாரசாமி பண்டாரம்
16. அழியாவிரதம் கொண்ட தம்பிரான்
17. ஈசானிய ஞான தேசிகர்
18. சற்குரு சுவாமி
19. பழனி சுவாமி
20. அருள்மொழி அம்மணி அம்மாள்
21. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி
22. காரியானூர் நடேச சுவாமி
23. அங்கப்பிரதட்சணம் அண்ணாமலி சுவாமி
24. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமி
25. சிவா சுவாமி
26. பத்திராசல சுவாமி
27. சேஷாத்திரி சுவாமி
28. ரமண முனிவர்
29. சடைச்சி அம்மாள்
30. அழகானந்த அடிகளார்
31. இரை சுவாமி
32. இசக்கி சுவாமி
33. சோணசால பாரதியார்
34. யோகி ராம்சுரத் குமார் [விசிறி சாமியார்].

இன்னும் பல மகான்கள் சித்தர்கள் யோகிகள் அருரூபமாக அருளாசி வழங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.