Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamகோயில் கனவில் வந்தால் என்ன பலன்?

கோயில் கனவில் வந்தால் என்ன பலன்?

கோயில் கனவில் வந்தால் என்ன பலன்?

பொதுவாக தூங்கும் போது கனவு வருவது இயல்பு தான். அது நல்லவிதமாகவும், நமக்கு சில அறிகுறிகளை காட்டக் கூடியதாகவும், கெட்ட கனவாகவும் கூட இருக்கலாம். ஒரு சிலர் கனவு மூலமாக என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். நல்ல கனவு வந்தால் அந்த நாள் முழுவதும் சந்தோஷமாக இருப்போம். அதுவே கெட்ட கனவாக இருந்தால் மனச போட்டு உருட்டிக்கிட்டே இருப்போம்.

  1. கோயில் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்…
  2. நீங்கள் கோயிலுக்கு செல்வது போல கனவு கண்டால் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
  3. கோயிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக்கொள்வது போல கனவு கண்டால் உங்களுக்கு சிக்கல்கள் உண்டாகும்.
  4. கோயிலில் பிரசாதம் வாங்குவது போல கனவு கண்டால் மனக் கவலைகள் ஏற்படும்.
  5. கோயிலில் நீங்கள் மட்டும் தனியாக இருப்பது போன்றும் கதவுகள் சாற்றப்படுவது போன்றும் கனவு வந்தால் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பணம் விரையம் ஏற்படலாம், கவனம் தேவை.
  6. திருவிழாவை சுற்றி பார்ப்பது போல கனவு கண்டால், பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
  7. திருவிழாவில் யாரையோ தேடுவது போல கனவு வந்தால் தொழிலும் குடும்பத்திலும் சில பிரசனைகள் உண்டாகும்.
  8. சுமங்கலி பெண் கோயிலில் விளக்கு ஏற்றுவது போல நீங்கள் கனவு வந்தால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  9. நீங்கள் திருநீறு பூசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு நல்ல ஞானம் அறிவு கிடைக்கும்.
  10. விநாயக பெருமானை நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் திடீர் பண வரவு ஏற்படும்.
  11. கோயில் கோபுரத்தை கனவில் கண்டால் தடைகள் நீங்கும். இறைவன் மீது கொண்டிருக்கும் பக்தி உங்களை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டு இருக்கும்.
  12. அம்மனை கனவில் கண்டால் அம்பாளுடைய பரிபூரண அருள் எப்பொழுதும் உங்களுக்கு கிடைத்து கொண்டே இருக்கும் என அர்த்தம்.
  13. கோயிலில் நடை சாற்றப்பட்ட நிலையில், நடையை திறந்து நீங்கள் உள்ளே செல்கிறீர்கள் என்றால் புதிய முயற்சியில் உங்களை ஈடுபடுத்தி வெற்றி அடைய போகிரீகள் என்று அர்த்தம்.
  14. உங்களுடைய கனவில் கடவுளுக்கு நீங்கள் மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் கடவுள் துணையுடன் உங்கள் காரியங்களில் வெற்றியடைய போகிறீர்கள் என அர்த்தம்.
  15. கனவில் கடவுளைக் கண்டால் உங்களது எல்லா கடவுளைக் கண்டாலு உங்களது எல்லா பிரச்சனைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  16. முருகப் பெருமானை கனவில் கண்டால் உங்களது எல்லா விதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
  17. கோயில் தெப்பத்தை கனவில் கண்டால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
  18. கடவுளிடம் நீங்கள் பேசுவது போல கனவு கண்டால் மிகவும் நன்மை. எடுத்த காரியத்தில் கடவுள் ஆசிர்வாதத்துடன் வெற்றி பெறுவீர்கள்.
  19. கோவில் மணியை நீங்கள் கனவில் கண்டால் நினைத்த காரியங்கள் வெற்றி உண்டாகும்.
  20. கோயில் மணி அடிப்பது போல கனவு வந்தால் நீங்கள் எதிர்பாராத இடங்களில் இருந்து பொருள் சேரும்.
  21. கோயில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் காரியங்களில் தடைகளும், இடையூறுகளும் உண்டாகும்.
  22. சிவன் கோயில் கனவில் வந்தால் ஆன்மீக்ம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும்.
  23. குலதெய்வம் கோயில் கனவில் வந்தால் மனதில் நினைத்த காரியம் நிறைவேறும்.
  24. அம்மன் சிலை கனவில் வந்தால் உங்களுக்கு அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
  25. திருப்பதி கனவில் வந்தால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
  26. குலதெய்வம் கனவில் வந்தால் சுபிட்சம் உண்டாகும். குலதெய்வ வழிபடு செய்வது நல்லது.
  27. கோயில் தேர் கனவில் வந்தால் எதிர்பாராத செய்திகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.
  28. கனவில் பெருமாள் வந்தால் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்று பொருள்.
  29. கோயில் இடிவது போல் கனவு கண்டால் உங்களுடைய தொழில் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 − one =

Most Popular