Monday, October 16, 2023
HomeArthamulla Aanmeegamகாசு, பணம் தங்க வாஸ்து ரகசியம் என்ன?

காசு, பணம் தங்க வாஸ்து ரகசியம் என்ன?

காசு, பணம் தங்க வாஸ்து சொல்லும் ரகசியம் என்ன?

எப்போதும் வீட்டில் காசு, பணம் நிரம்பி இருக்க வாஸ்து சாஸ்திரம் என்ன ரகசியம் சொல்கிறது என்று பார்க்கலாம் வாங்க. உங்களது வீட்டில் பணப்பெட்டி அல்லது பீரோவை தெற்கு திசை நோக்கி வைத்தால் பணப்பெட்டி காலியாக இருக்கும்.

உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது. வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் மாதிரி போய் கிட்டே இருக்கும். வரவுக்கு மிறிய செலவு வரும்.

தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்ட மாதிரி உடனே கரையும். உங்கள் விட்டு பூஜை அறையில் சாமி படங்ககளை மேற்கு திசை நோக்கி .வைத்தால் கூட வரவும் செலவும் சரியாக இருக்கும்.சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்திர்களானால் பணம் வருவதும் போவதும்மாக இருக்கும் தங்கவே தங்காது.

பண பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு. பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டுக்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியைப் போன்றது. அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள். நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.

அளவுக்கு மீறி பணம் வந்தாலும் ‘சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி’ என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்க மாட்டார்கள். அவர்களுடைய மகன், மகள், பேரன்மார்கள் தான் அந்தப் பணத்தைச் செலவு செய்து வாழ்வார். அதனால்தான் ‘ஈயா பண்டம் தீயாய்க் கெடும்’ என்ற முதுமொழியே வந்தது.

உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும். பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், 2000 ரூபாய் நோட்டாக வையுங்கள். பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள்.

பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்) பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + seven =

Most Popular