Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamவீடு கிரகப்பிரவேசத்திற்கு ஏற்ற மாதம் எது?

வீடு கிரகப்பிரவேசத்திற்கு ஏற்ற மாதம் எது?

வீடு கிரகப்பிரவேசத்திற்கு ஏற்ற மாதம் எது?

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் செய்ய வேண்டுமென்றாலே நல்ல காலம், நேரம், மாதம், நட்சத்திரம் என்று எல்லாமே பார்ப்பது உண்டு. கிரக நிலைகள் சாதகமாக நிலையில் இருக்கிறதா, பாதகமான நிலையில் இருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பது உண்டு. அதாவது, ஜாதகம் பார்த்து தான் சுபநிகழ்ச்சிகள் செய்வார்கள். அதுபோல புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்து குடி கொள்ள சிறந்த மாதம், நாள், நட்சத்திரம் எல்லாம் பார்ப்பது உண்டு.

தமிழ் மாதங்களில் சித்திரை முதல் பங்குனி மாதம் வரையில் எல்லா மாதமும் கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற மாதமா என்றால் இல்லை. அப்போ கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற மாதம் எது என்று பார்க்கலாம் வாங்க.

  1. சித்திரை
  2. வைகாசி
  3. ஆவணி
  4. ஐப்பசி
  5. கார்த்திகை
  6. தை

வீடு கிரகப்பிரவேசம் செய்ய சிறந்த நாட்கள் எது?

  1. திங்கட்கிழமை
  2. புதன் கிழமை
  3. வியாழன் கிழமை
  4. வெள்ளிக் கிழமை

வீடு கிரகப்பிரவேசம் செய்ய சிறந்த நட்சத்திரங்கள் எது?

அசுவினி, ரோகினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வதம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திரங்கள் வீடு கிரகப்பிரவேசம் செய்வதற்கு சிறந்தவை.

வீடு கிரகப்பிரவேசம் வைக்க சிறந்த லக்னம் எது?

  • ரிஷபம்
  • மிதுனம்
  • கன்னி
  • விருச்சகம்
  • கும்பம்

எந்த மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது?

ஆனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த ஆனி மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார். இந்த மாதத்தில் இராவணன் தனது கோட்டையை இழந்தார்.

புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

மார்கழி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தார்.

மாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் சிவபிரான் ஆல கால விஷம் அருந்தி மயக்க முற்றார்.

பங்குனி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதம் தான் சிவன் மன்மதனை எரித்த மாதமாகும்.

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் வீடு கட்ட தொடங்குவது, புது வீட்டிற்கு குடி போகுதல் போன்ற சுப காரியங்கள் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இது தவிர அவரவர் சுய ஜாதகத்தைப் பார்த்து கிரக நிலைகளின் பெயர்ச்சி வைத்தும், அவர்களது ராசி, நட்சத்திரம் வைத்தும், வீடு கட்டலாமா? அல்லது கட்டிய வீட்டை வாங்கலாமா என்பதை பார்த்து தெரிந்து கொண்டு அதன் பிறகு வாங்கிக் கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 5 =

Most Popular