Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamஏன் காலில் வெள்ளி கொலுசுக்குப் பதில் தங்க கொலுசு அணியக் கூடாது?

ஏன் காலில் வெள்ளி கொலுசுக்குப் பதில் தங்க கொலுசு அணியக் கூடாது?

ஏன் காலில் வெள்ளி கொலுசுக்குப் பதில் தங்க கொலுசு அணியக் கூடாது?

பெண்களின் அணிகலன்களில் முக்கியத்துவம் கொலுசுக்கு உண்டு. பழங்காலத்தில் பிறந்த குழந்தைக்கு வெள்ளி காப்பு, கொலுசு என்று அணிவித்து மகிழ்வோம். நாளடைவில் அந்த பழக்கம் மாறி வெள்ளிக்குப் பதிலாக தங்க கொலுசு அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. உண்மையில் தங்க கொலுசு அணிந்து கொள்ள கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சூரிய பகவானை நம் கண்ணுக்கு இணையாக சொல்கிறார்கள். சந்திர பகவான் மூச்சுப் பகுதி என்றும், செவ்வாய் பகவான் முகம் மற்றும் வாய்ப் பகுதி என்றும், புதன் பகவானை உடலின் நரம்புகள் என்றும், குரு பகவானை வயிறு தொடர்பான பாகங்கள் என்றும், சுக்கிர பகவானை இடுப்பிலிருந்து தொடை வரை இருக்க கூடிய பாகங்கள் என்றும், தொடையிலிருந்து காலின் பாதப் பகுதி வரை சனி கிரகத்திற்குரிய இடம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

பாதம் சனி பகவானின் அம்சம், தங்கம் குரு பகவான் மற்றும் மகாலட்சுமி தேவியின் அம்சம். ஆகையால் தான் குண்டுமணி நகை வாங்குவதாக இருந்தாலும் கூட குரு ஹோரையில் வாங்க சொல்லி ஜோதிட நூல்கள் வலியுறுத்துகின்றன. அப்படி குருவுக்குரிய தங்க நகைகள் மற்றும் தங்க காசுகளை குரு ஹோரையில் வாங்கினால் குருவின் பரிபூரண அருளும், அவரது ஆசியும் கிடைக்கும். அதோடு, தங்க நகைகள் மென்மேலும் சேரும் என்பது ஐதீகம்.

திருமணத்திற்கு மாங்கல்யம் வாங்கும் போதோ அல்லது திருமாங்கல்யம் செய்வதற்கு பொன் உருக்கி கொடுக்கும் போதோ, குரு ஹோரையில், குரு பார்க்க கூடிய லக்கினத்தில் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். தங்கம் குருவின் அம்சம். வயிறு அது தொடர்புடைய பகுதியை குருவுக்கான பகுதி என்று சொல்கிறோம். அதனால், குருவின் ஆதிக்கம் நிறைந்த மாங்கல்யத்தை, தங்க செயின், தங்க டாலர் ஆகியவற்றை அணிந்து கொள்ள வலியுறுத்துகின்றனர்.

மேலும், மகாலட்சுமியின் ஆதிக்கம் நிறைந்த தங்கத்தை, மகாலட்சுமியின் அம்சமான தங்கத்தை இடுப்புக்கு கீழே அணிவதை தவிர்க்க வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும், காலில் அதனை அணியவே கூடாது என்கிறார்கள். தங்கத்தை காலில் கொலுசாக அணிந்தால், தங்கத்தின் நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்களாக நமக்குள் தோன்ற தொடங்கிவிடுகின்றன. அதாவது தங்க கொலுசு அணிந்தால் நன்மைக்குப் பதிலாக தீமையே அதிகம் நடக்கும்.

அதனால், தான் காலில் வெள்ளி கொலுசு, மெட்டி அணிய சொல்கிறார்கள். தங்கத்துக்கு தோஷம் உண்டு, ஆனால், வெள்ளிக்கு ஏதும் தோஷம் இல்லை. தங்கம் குரு என்றால், வெள்ளி சுக்கிரன். ஆகவே வெள்ளியில் அணிவது மிக மிக நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 17 =

Most Popular