எல்லா உயிரும் சிவமே என்ற தன்மையை அனுபவிக்கும் படி இருக்கவேண்டும் ..
நமது குறுகிய மனப்பான்மை,
உயர்வு / தாழ்வு என்ற பேதம்பார்ப்பது..
பிற உயிர்கள் சிக்கியிருக்கும் மாயா பயத்தை …
உடைத்தெறிய உதவ வேண்டுமே தவிர ..
சிவனடியார்கள் சிறந்தவர்கள் ?? மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் !!
அவர்களை இறைவன் தண்டிப்பான் !!
இப்படி இருந்தால் மட்டுமே சிவனடியார் போன்ற மாயைகள் கடந்த தெளிவு நம்முள்ளே பிறக்க வேண்டுமோ தவிர …
எதையாவது காட்டி பயமுறுத்த அல்ல சிவ வழிபாடு !!
எப்பயத்தையும் நீக்க வல்ல சிவத்திடம் பயப்படுங்கள் என்று வலியுறுத்துவதா வழிபாடு !!
இதை தானே பிறர் செய்கிறார்கள்..
அதாவது
துன்பத்தை முன்னிறுத்தி, இல்லாதா சாத்தானை முன்னிறுத்தி ஓர் அடக்குமுறையை மறை முகமாக கையாண்டு, ஓர் பயத்தில் ஒரு கூட்டத்தை தங்கள் காட்டுக்குள்ளே வைத்திருக்கிறார்கள் !!
நாம் ஏன் இப்படியே பயத்தை முன்னிறுத்த வேண்டும் ..
இன்பத்தை முன்னிறுத்துங்கள் !!
ஆனந்தத்தை வெளிப்படுத்துங்கள் !!
என்றும் அழியா மாறா பேரானந்தத்தை எடுத்து சொல்லலாம் தானே ..
இதை நாம் வழிபாடுகள் நமக்கு உணர்விக்க வில்லையா
வீடுபேறு என்று ஆன்மவிடுதலை போன்ற எத்தனையோ இருக்க ..
ஏன் பயத்தை நாமும் முன்னிறுத்த வேண்டும் ??
அதிலும் சிவனடியார் என்றால் என்ன ?? என்ற மெய்யை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ..
பிரபஞ்ச பேர் இயக்கமான சிவம் என்று
இறைப்பேராற்றால் வழியே தோன்றியது தானே யாவும் !!
அப்படி இருக்க இந்த பிரபஞ்சமே அவனது இருப்பு, தீண்டல், சூழற்ச்சி வழியே இயங்கி
பிறந்து வளர்ந்து வாழ்ந்து மாற்றம் என்ற ஒன்றை அடைந்து கொண்டு இருக்கும் போது !!
இதில் எல்லாமே சிவனடியார் தானே !!
ஓர் அணு உயிரினத்தில் தொடங்கி, கோள்கள், அண்டம், பேரண்டம், பிரபஞ்சம் போன்ற அத்தனையும் சிவனடியார்தானே !!
அதில்
அறிந்தது ?? அறியாதது ?? வேறு பெயர் சொல்லி வழிபடுவது ??
ஏதுவாகவோ உணர்வது போன்ற எத்தனை பேதங்கள் கொண்டாலும் அத்தனையும் சிவம் அடியில் என்றும் எதுவாகவும் ஜீவித்து கொண்டே இருக்கும் சிவனடியார்தானே !!
எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருங்கள் !! மதியுங்கள் !! உதவுங்கள் !! என்றும் எதையும் சிவமாக சிவத்தின் அடியார்களாகவே மெய்யை உணருங்கள் என்று கூறுவது சாலச்சிறந்தது தானே ..
எந்த உயிர் எப்போது
அவனை எப்படி உணரவேண்டுமோ அப்படி உணர்வது தானே அந்தந்த உயிருக்கான தனித்துவம் ..
நம்வரையில் உணர்ந்த வண்ணமே யாவரும் உணரவேண்டும் !! என்று எதிர்பார்ப்பது கூட ஒரு விதத்தில் சிறுமை தானே ..
எனவே சிவனடியார்களே நிறைந்து இருக்கும் பிரபஞ்சத்தில் ..
சிவம் என்ற மெய்யை உணரும் அடியார்கள் யாருமே ..
பேதம் பார்ப்பது, குறை கூறுவது, பயமுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடாது இருப்பதே சாலசிறந்த சிவத்தொண்டும் !! நம் சிவவழிபாட்டின் மேன்மையும் …
மெய்யை மெய்யாய் உணர்வோம் ..
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா
