எப்படிப்பட்ட எதிரியையும் சுலபமாக துரத்தி அடிக்க, இந்த ஒரு தீபம் ஏற்றினாலே போதும்.

795

மனிதனாகப் பிறவி எடுத்த எல்லோருக்குமே, எதிரிகள் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமான ஒன்று. கட்டாயம் எதிரி என்று யாராவது ஒருவர் கண்ணுக்குத் தெரிந்தோ அல்லது கண்ணுக்குத் தெரியாமலோ பிரச்சினை செய்து கொண்டுதான் இருப்பார்கள். கண்ணுக்கு தெரிந்த எதிரியை கூட, நேருக்கு நேராக நின்று சண்டை போடும் எதிரியை கூட சுலபமாக சமாளித்து விடலாம். கண்ணுக்குத் தெரியாமல், பின்னால் நின்று குழியை தோண்டும் எதிரி மிக மோசமானவனாக இருப்பான். சரி. உங்களுக்கு இருக்கும் எதிரி எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும், அந்த எதிரியை உங்கள் பக்கம் திரும்பிக்கூட பார்க்க விடாமல் செய்யும் ஒரு பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தீபம் ஏற்றும் திரியில் பல வகையான நிறங்கள் இருந்தாலும், நீலநிற திரிக்கென்று ஒரு குறிப்பிட்ட சிறப்பு உண்டு. இந்தத் திரி எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இந்த நீல நிற திரியை கொண்டு தீபம் ஏற்றினால், நம்முடைய எதிரிகள் நம்மை விட்டு தூரம் ஓடி விடுவார்கள் என்று ஒரு சாஸ்திர குறிப்பு சொல்கிறது.

உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக்கொண்டு, அதற்கு மஞ்சள் குங்குமத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி நீல நிற திரியை கொண்டு தீபமேற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்குப் பக்கம் நோக்கியவாறு இருக்க வேண்டும். நீலநிறதிரியை இரட்டை திரியாக போட்டுக் கொள்வது மிகவும் நல்லது. அந்த அகல் விளக்கிற்கை தரையில் வைத்து தீபம் ஏற்றக்கூடாது. ஏதாவது ஒரு சிறிய தட்டின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இந்த தீபத்தை ஏற்றலாம். தினந்தோறும் காலையும், மாலையும் இந்த தீபத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றி வரும் பட்சத்தில், உங்களுடைய எதிரிகள், உங்கள் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. உங்களுக்கே தெரியாத உங்கள் எதிரியையும் துரத்தியடிக்கும் தீபம் தான் இது. தீபம் ஏற்றும் சமயத்தில் உங்களுடைய எதிரியை மனதில் நினைத்துக்கொண்டு, குறிப்பிட்ட அந்த எதிரியின் மூலம் எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதை நரசிம்மரிடம் மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

இதனால் உங்களுடைய எதிரியின் உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் எதுவும் தேவை இல்லை. அப்படி ஆபத்து எதுவும் ஏற்படாது. அவர்கள் உங்களுடைய வாழ்க்கையில் தலையிடாமல் விலகி சென்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீபத்தை ஏற்றும்போது நரசிம்மரை மனதார வேண்டி ‘ஓம் நரசிம்மாய நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்தால் போதும். எதிரிகள் தொல்லை நீங்குவதற்கு இந்த பரிகாரம் மிகவும் சுலபமான, சக்தி வாய்ந்த பரிகாரம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி, எதிரிகளிடமிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.