Thursday, October 19, 2023
HomeAstrological Remediesஇந்த பரிகாரத்தை 48 நாட்கள் செய்பவர்களுக்கு திருமண தடை விலகும்

இந்த பரிகாரத்தை 48 நாட்கள் செய்பவர்களுக்கு திருமண தடை விலகும்

இந்த மூன்று பொருட்களை வாங்கி, பின் சொல்லப்படும் பரிகாரத்தை முறையாக செய்தால் 48 நாட்களில் இந்த பூஜையைச் செய்பவர்களுக்கு, திருமணம் நிச்சயம்

உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் அந்த 3 பொருட்களில் முதலாவது லோஅத்திரைப்பட்டை அல்லது இதை லோத்திரைபட்டை என்று சொல்லுவார்கள். இரண்டாவதாக ஆவாரம்பூ, மூன்றாவதாக தாமரை பூ இதழ்கள், ஆவாரம் பூ காய்ந்ததாக இருந்தாலும் பரவாயில்லை. தாமரை பூ இதழ்கள் காய்ந்தது இருந்தாலும் பரவாயில்லை. தவறு ஒன்றும் கிடையாது. இந்த இரண்டு பூக்களும் வாடாமல் புதியதாக கிடைத்தாலும் சரி பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இந்த மூன்று பொருட்களையும் வைத்து ஒரு நூல் போட்டு சிறிய முடிச்சு போல கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

தயார் செய்த இந்த மூட்டை உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே ஒரு அலமாரியில் இருக்கலாம். தினமும் காலை எழுந்தவுடன் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, இந்த முடிச்சை உங்களது உச்சந்தலையில் ஒரு 30 வினாடிகள் வைத்து, மனதார உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷம் நீங்க வேண்டும். திருமணம் விரைவாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மீண்டும் அந்த முடிச்சை உங்கள் முன்பாக ஒரு தட்டின் மீதோ அல்லது ஒரு சிறிய கிண்ணத்தின் மீதோ வைத்துக் கொள்ளுங்கள். (திருமணமாகாத ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களுக்கு பரிகாரம் செய்ய முடியாத மாதவிலக்கு நாட்களில், அந்த நாட்களை தவிர்த்துக் கொண்டு மீண்டும் தொடரலாம்.) –

அதன்பின்பு, வாசனை மிகுந்த தூபத்தை ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சுக்கு காண்பிக்க வேண்டும். அடுத்தபடியாக இருகைகளையும் கூப்பி பின்வரும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான திருமணத்தடையை போக்கக்கூடிய அந்த மந்திரம் இதோ!

ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம் ஐம்
ஐம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஓம்.

அவ்வளவுதாங்க, 48 நாட்கள் இந்த முறையை பின்பற்றி பாருங்கள். 48வது நாள் இந்த பூஜை நிறைவடையும் இப்போது, உங்களுடைய வீட்டில் தூபம் போடும் தூபக்கால் கட்டாயம் இருக்கும். அதில் நெருப்பு மூட்டி விட்டு, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் அந்த மஞ்சள் நிற முடிச்சை லோத்திரப்பட்டை, ஆவாரம் பூ, தாமரை இதழ், கொண்ட முடிச்சை அந்த நெருப்பில் போட்டு, 2 ஸ்பூன் நெய் விட்டு அக்னி ஹோமம் நடத்தி விடுங்கள். முடிச்சு கழட்ட வேண்டாம். துணையோடு போட்டு ஹோமம் நடத்தி விடலாம்.

உங்கள் பூஜை அறையில் இந்த ஹோமம் செய்து நிவர்த்தி செய்து விட்டால், உங்களுடைய தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகி, விமோசனம் கிடைக்கும். திருமணம் உங்களுக்கு கூடிய விரைவில் நிச்சயிக்கப்படும். உங்களுடைய ஜாதக கட்டத்தில் பிரச்சினை மிகவும் வலிமையாக இருந்தால் கூட மூன்று மாதத்திற்குள் உங்களுக்கு நிச்சயம் திருமணம் ஆகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =

Most Popular