சூரிய பகவானால் ஏற்பட்ட தோஷத்தை போக்கும் ஸ்தலம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த தலத்தில் புஷ்பரதேஸ்வரர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார் சிவபிரான். இவரை வழிபட்டு சூரியபகவான் பாவங்கள் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது. அதனாலேயே சூரியனால் ஏற்படும் தோஷங்கள் போக்கும் பரிகார தலமாக விளங்குகிறது இந்த ஞாயிறு திருக்கோயில்.
சூரிய புஷ்கரணி:
சூரியன் வழிபட்டதால் இங்குள்ள தீர்த்தமும் சூரிய புஷ்கரணி என்று பெயர் கொண்டுள்ளது. சூரியனால் ஏற்படும் தோஷங்கள் போக்கும் பரிகார தலமாக ஞாயிறு திருக்கோயில் விளங்குகிறது.
சூரிய தோஷம் என்றால் என்ன?
ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜாதக ரீதியாகச் சூரியன் பலமிழந்து தோஷங்கள் அமையும் வாய்ப்பு உண்டு. அப்படிப்பட்டவர்கள் சூரியனின் தோஷத்தால் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் வழிபட்டதக்க தலம் இந்த ஞாயிறு திருக்கோவில் .
தனிச் சன்னதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் சூரிய பகவான். களத்திர தோஷம் நீங்கவும், வேலைவாய்ப்பு அமையவும் ஆரோக்கியம் பெருகவும் என வெவ்வேறு பிரார்த்தனைகளுடன் நடக்கிறது சங்கல்பம் செய்யப்படுகிறது.
பலன்கள்:
தொழுநோய் போன்றவை குணமாக்கச் சூரியனை வழிபடுவது சிறந்தது. தாமிர பாத்திரத்தில் கோதுமை வைத்து அதில் சூரியனைப் பிரதிஷ்டை செய்தும் அல்லது சூரியனை வழிபட்டுத் தானமாக வழங்கினால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சூரிய தோஷம் விலக பரிகாரம்:
ஆறு வாரம் அல்லது 15 வாரம் என்று சங்கல்பம் செய்து கொண்ட ஞாயிறு திருத்தலத்திற்கு வரவேண்டும். இந்த சூரிய புஷ்கரணியில் நீராட வேண்டும் அல்லது அந்த நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். கோதுமை வைத்த தாமிர பாத்திரம், சிவப்பு வஸ்திரம், தாமரை பூ ஆகியவற்றைச் சூரியன் சன்னிதியில் கொடுத்த அர்ச்சனை செய்ய வேண்டும்.
தங்கள் வயதிற்கு ஏற்ப தீபம் ஏற்ற வேண்டும். ஆறு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இப்படி ஆறு வாரம் அல்லது 11 வாரம் அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால் சூரியனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
சூரிய காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்!!
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்!!
தினமும் காலையில் எழுந்து நீராடிய பின்னர் சூரிய பகவானுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.