Sunday, October 15, 2023
HomeAstrological Remediesகர்ம வினைகள் அனைத்தும் தீர பரிகாரம்!

கர்ம வினைகள் அனைத்தும் தீர பரிகாரம்!

கர்ம வினைகள் அனைத்தும் தீர பரிகாரம்!

கும்பகோணம் அருகில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ள கோயில் சாரபரமேஸ்வரர் கோயில். மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் கூடவே அன்லிமிட்டெட் ஆக வருவது துன்பங்கள்தான் ஏன் தான் பிறந்தோம் என சொல்லும் அளவுக்கு பலர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பிறவியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், ஒரு சிலர் கடந்த கால கடுமையான கர்ம வினையால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். வினையை தீர்த்து வைப்பது என்றால் மேஜிக் போல உங்கள் வினைகள் அனைத்தும் போய் விடாது.

அகரமே அறிவே போற்றி!
அகஞ்சுடர் விளக்கே போற்றி!
அகந்தை நோய் அழிப்பாய் போற்றி!
அகத்தனே போற்றி! போற்றி!
அடியர்கள் துணையே போற்றி!

அணுவினுள் அணுவே போற்றி!
அண்டங்கள் கடந்தாய் போற்றி!
அம்மையே அப்பா போற்றி!
அருமறை முடிவே போற்றி!
அருந்தவர் நினைவே போற்றி!

அரும்பிறை அணிந்தாய் போற்றி!
அரஹரா போற்றி! போற்றி!
அலைகடல் விரிவே போற்றி!
அவிரொளி சடையாய் போற்றி!
அழகனாம் அமுதே போற்றி!

அறிந்திடு மொழியே போற்றி!
அளப்பிலா அருளே போற்றி!
அன்பெனும் மலையே போற்றி!
ஆடரவு அணியாய் போற்றி!
ஆடிடும் கூத்தா போற்றி!

ஆதாரப் பொருளே போற்றி!
ஆதியே அருளே போற்றி!
ஆலால கண்டா போற்றி!
ஆலமர் குருவே போற்றி!
ஆலவாய் அப்பா போற்றி!

ஆரூரின் தியாகா போற்றி!
ஆற்றலே போற்றி! போற்றி!
இடபவா கனத்தாய் போற்றி!
இதயத்தே கனிவாய் போற்றி!
இமயவள் பங்கா போற்றி!

இமையவர் உளத்தாய் போற்றி!
இரக்கமே வடிவாய் போற்றி!
இருட்கறை மிடற்றாய் போற்றி!
இருவினை தவிர்ப்பாய் போற்றி!
இன்னல்கள் களைவாய் போற்றி!

இனிமையே நிறைப்பாய் போற்றி!
இனியவர் மனத்தாய் போற்றி!
இனிய செந்தமிழே போற்றி!
இலக்கியச் செல்வா போற்றி!
இறைவனே போற்றி! போற்றி!

ஈசனே போற்றி! போற்றி!
ஈசானத் திறையே போற்றி!
ஈடிலா பிரானே போற்றி!
ஈந்தருள் தேவே போற்றி!
ஈமத்தே குமிப்பாய் போற்றி!

உடுக்கையின் ஒலியே போற்றி!
உடைகரித் தோலாய் போற்றி!
உடையனே போற்றி! போற்றி!
உணவொடு நீரே போற்றி!
உரைகடந் தொளிர்வாய் போற்றி!

உருவொடும் அருவே போற்றி!
உமையொரு பாகா போற்றி!
உலகின் முதலே போற்றி!
உள்ளொளிர் சுடரே போற்றி!
ஊக்கமே உணர்வே போற்றி!

ஊங்கார ஒலியே போற்றி!
ஊரெல்லாம் உவப்பாய் போற்றி!
ஊழினை விதிப்பாய் போற்றி!
எண்குண வடிவே போற்றி!
எம்பிரான் போற்றி! போற்றி!

எரிதவழ் விழியாய் போற்றி!
எருதேறும் ஈசா போற்றி!
எல்லையில் எழிலே போற்றி!
ஏக நாயகனே போற்றி! போற்றி!
ஏகம்பா இறைவா போற்றி!

ஏக்கமே களைவாய் போற்றி!
ஏந்துகூர் மழுவாய் போற்றி!
ஏந்தலே போற்றி! போற்றி!
ஏத்துவார் ஏத்தே போற்றி!
ஏதிலார் புகழே போற்றி!

ஏர்முனைச் செல்வா போற்றி!
ஏற்றமே தருவாய் போற்றி!
ஐம்பூத வடிவே போற்றி!
ஐம்புலன் அவிப்பாய் போற்றி!
ஐயங்கள் களைவாய் போற்றி!

ஐயனே அரனே போற்றி!
ஓண்குழைக் காதா போற்றி!
ஒப்பிலா மணியே போற்றி!
ஒளியெறி நுதலாய் போற்றி!
ஒள்ளிழை பாகா போற்றி!

ஒப்பிலாய் போற்றி! போற்றி!
கண்கள் மூன்றுடையாய் போற்றி!
கண்ணப்பர் முதலே போற்றி!
கருணைமா கடலே போற்றி!
கறைதிகழ் கண்டா போற்றி!

காமனை எரித்தாய் போற்றி!
காலனை கடிந்தாய் போற்றி!
கடவுளே போற்றி! போற்றி!
சிவமெனும் பொருளே போற்றி!
செவ்வொளி வடிவே போற்றி!

தவநிலை முடிவே போற்றி!
தண்பதம் தருவாய் போற்றி!
பவலமெலாம் தவிர்ப்பாய் போற்றி!
பரமெனும் பொருளே போற்றி!
புலியூரான் உளத்தாய் போற்றி!

புரந்து அருள்வாய் போற்றி!
புண்ணியா போற்றி! போற்றி!
புனர் ஜன்மம் தந்தோனே போற்றி!
புகழ் தருவோனே போற்றி!
பூமி நாயகனே இறைவா போற்றி!

மலையான் மருமானே போற்றி!
மலைவாழ் நாயகனே போற்றி!
மாதா வானவனே இறைவா போற்றி!
மகத்தா னாவனே போற்றி! போற்றி!
வண்ண நீல வடிவானவனே போற்றி!

வடிவம் பல கொண்டவனே போற்றி!
வாழ வழி காட்டுபவனே போற்றி!
வாழும் இறைவா போற்றி! போற்றி!

வினைகளில் இருந்து உங்களை மீட்டுக்கொள்ளும் வழியை உங்களை அறியாமலேயே அவர் காட்டுவார். கர்ம வினைகளில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்கும் வழியை காண்பிப்பார் அவர். இப்படி தீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் ஒரு கோவில்தான் இந்த சார பரமேஸ்வரர் கோவில். இது கும்பகோணம் அருகில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது. இங்குதான் இந்த கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு நாம் 11 திங்கட்கிழமைகளில் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் முடியவில்லை வயதானவர் மிக தூரத்தில் இருந்து செல்கிறோம் என்றால் 11 வாரத்துக்கு அர்ச்சனைக்கு உரிய தொகையை கொடுத்து விட்டால் 11 வார பிரசாதமும் வீடு வந்து சேரும். நாம் 11வது வாரம் மீண்டும் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.

இந்த ஆலய இறைவன் பெயர் இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. மகாபாரதத்தில் வரும் கதையான எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறிய குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு உள்ளது.

இத்தலத்தில்தான் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ இருக்கிறார் இங்குதான் மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.

மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் பிறவிக்கடனும், இப்பிறவி காலத்தில் பொருள் கடனுமாக இரண்டு கடன்கள் உண்டு. இங்குள்ள ரிண விமோசன லிங்கேஸ்வரரை தொடர்ந்து வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம்.
எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.

அதே போல் இங்குள்ள பைரவர் ஸ்வாமியை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும். சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனியால் அவதிப்படுவோர் இவரை வணங்கலாம். மிகவும் அருமையான இக்கோவிலுக்கு சென்று வாருங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள். கும்பகோணத்தில் இருந்து இக்கோவிலுக்கு பேருந்து வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular