Wednesday, October 18, 2023
HomeAstrological Remediesஆஞ்சநேயருக்கு இந்த வழிபாடுகள் செய்தால் தீரும் பிரச்சனைகள்

ஆஞ்சநேயருக்கு இந்த வழிபாடுகள் செய்தால் தீரும் பிரச்சனைகள்

நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும்.

ஆஞ்சநேயருக்கு இந்த வழிபாடுகள் செய்தால் தீரும் பிரச்சனைகள்
ஆஞ்சநேயர்
நாம் ஆஞ்சனேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம், ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சநேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும். அதே போல் பலவிதமான இன்னல்கள் வரும் போது ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக பிரச்சனைகள் தீரும்.

அவருக்கு செய்பவைகளில் சில ,

– வடைமாலை சாத்துதல்
– செந்தூரக்காப்பு அணிவித்தல்
– வெண்ணெய் காப்பு சாத்துதல்
– ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.

வடைமாலை

அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம்.

வெண்ணெய் சாத்துதல்

ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டுச் சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார்,அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

சிந்தூரக் காப்பு

சீதையை அசோகவனத்தில் கண்ட அனுமாரிடம் சீதை கேட்கிறாள்.”என் அவர் நலமா? என்று….. அதற்கு அனுமான் “எப்போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார் என்றதும்…..

மகிழ்ச்சி தாங்காமல் சீதை தரையிலிருந்து செம்மண்ணை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.,இதைப் பார்த்த அனுமனுக்கு மிக மிக சந்தோஷம் .தாங்க முடியவில்லை தானும் தன் உடம்பு முழுவதும் செம்மண் பூசிக் கொண்டாராம்..

ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்

ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல், அனுமன் தன் இதயத்திலேயே ராமாவை வைத்திருக்கிறார். சில படங்களில் அவர் தன் இதயத்தையே கிழித்து ராமாவைக் காட்டுவது போல் நாம் பார்த்திருக்கிறோம் ராம் நாமம் எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.

வாலில் பொட்டு வைப்பது

அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான் .இராவணன் முன் தன் வாலையே சுருளாக்கி சிம்மாசனமாக்கி இராவனனுக்கும் மேல் உயரமாக் அமர்ந்தவர் அவர் இலங்கையை எரித்ததும் வாலில் வைத்த நெருப்பினால் தான் அவருக்கு சூடு தெரியாமல் ஆனால் இலங்கையே எரிந்தது, ஆகையால் வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை

ஆஞ்சநேயர் ராமஜெய மாலை

ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொள்பவர்கள், ராமஜெயம் எழுதிய காகிதங்களை சுவாமிக்கு அணிவிக்கிறார்கள். இது சரியான முறை அல்ல. ஆஞ்சநேயருக்கு காகித மாலை போடவேண்டுமென சாஸ்திரத்திலும் சொல்லவில்லை. ஆஞ்சநேயரின் அருள்பெற வேண்டுபவர்கள், அவருக்கு பிடித்த துளசி, வெற்றிலை மாலை சார்த்தி, ஸ்ரீராமஜெய நாமத்தை மனதாரச் சொல்லி, வணங்கினால் போதும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 15 =

Most Popular