Saturday, October 14, 2023
HomeAstrological Remediesகடன் சுமையை தீர்க்கும் பரிகாரம்!

கடன் சுமையை தீர்க்கும் பரிகாரம்!

தீராத கடன் சுமையை தீர்த்து உங்கள் கையில் பணம் சேர்க்கும் சக்தி வாய்ந்த பரிகாரம்!

அனைவரது வாழ்க்கையிலும் நல்லது கெட்டது என இரண்டு இருப்பது போல் கடன் வாங்குவதும், கடனை திருப்பிக் கொடுப்பதும் என்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் ஒரு சில நேரங்களில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம். இந்த சூழ்நிலை அனைவரது வாழ்க்கையில் நடந்திருக்கும் ஆனால் இந்த சூழ்நிலை இன்னும் சற்று தீவிரமாகி பெரிய அளவிலான கடன் சுமைகள் கூட நம்ம மேல் வந்து விழும் இது போதாததற்கு அவர்களது மனதிலும் ஆயிரம் கஷ்டங்களும் குமுறல்களும் ஓடிக் கொண்டிருக்கும் இதையெல்லாம் படிப்படியாக தீர்ப்பதற்கு ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

இந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும்

ஆம் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை 11 வெள்ளிக்கிழமைகள் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், முதலில் உங்கள் மனதில் இருக்கும் கஷ்டங்கள், குமுறல்கள், பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கி பெரும் மன நிம்மதி அடைவீர்கள். அதன் பின்பு உங்கள் வாழ்வில் இருக்கும் தீராத கடன் சுமைகளும் தீரும், உங்கள் கைகளில் பணம் வந்து சேரும், உங்கள் வீட்டில் வெகு நாட்களாக திருமணமாகாத நபர்களுக்கு திருமணம் கூட நடக்கும், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். இப்படி உங்கள் வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் ஒட்டுமொத்தமாக இந்த பரிகாரம் நீக்கிவிடும்.

சூரியன் உதிப்பதற்கு முன்பு பூஜை

இப்படி நாம் கஷ்டங்களை எல்லாம் அடியோடு நீக்கும் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்வதற்கு உங்களுக்கு சிறிது வெள்ளை மொச்சைக்கொட்டை பயறும் சிறிது வெல்லமும் தேவைப்படும். அதனால் அதை எடுத்துக் கொண்டு காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாக இந்த பூஜை செய்ய வேண்டும். ஏனென்றால் சூரியன் உதிப்பதற்கு முன்பு இந்த உலகில் சில நல சக்திகள் இருக்கு.ம் அந்த சமயத்தில் இந்த பூஜை நடந்தால் வேண்டுதல் நிறைுவறும். ஆகையால் முடிந்த அளவிற்கு காலை 6:00 மணிக்கு முன்பாக எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பயபக்தியோடு பூஜை அறையை தயார் செய்து விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

27 முறை உச்சரிக்க வேண்டும்

பின் பூஜை அறையில் அமர்ந்து ஒரு கையில் 27 மொச்சகொட்டை பயிறையும், சிறிது வெல்ரத்தையும் வைத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வம், உங்கள் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி தாயாரை மனதில் நினைத்து உங்கள் கஷ்ட நஷ்டங்கள் தீர வேண்டும் மனம் உருகி வேண்டி கொண்டு “ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி” என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் நீங்கள் கையில் வைத்திருக்கும் மொச்சையையும், வெல்லத்தையும் சேர்த்து போட்டு விடுங்கள். பின் தண்ணீரில் மொச்சை பயறு நன்கு ஊறியதும் பசுமாட்டிற்கு அல்லது காகம் குருவிகளுக்கு சாப்பிடக் கொடுங்கள். முடியாத பட்சத்தில் மனித காலடிகள் படாத இடத்தில் போட்டு விடுங்கள் எப்படி இந்த பரிகாரத்தை தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகள் செய்து வந்தால் உங்கள் பண கஷ்டம் மற்றும் மன கஷ்டம் தீர்ந்து சுகவாழ்வோடு இருப்பீர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

Most Popular