Monday, October 16, 2023
HomeAstrological Remediesஎல்லா தோஷங்களும் நீங்க பரிகாரம்!

எல்லா தோஷங்களும் நீங்க பரிகாரம்!

எல்லா தோஷங்களும், பிரச்சனைகளும் தீர செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன?

  1. வில்வ மரத்தை 21 முறை வலம் வந்தால் தீர்ப்புகள் சாதகமாகும்.
  2. வெள்ளிதோறும் நாகராஜா சிலைக்கு மஞ்சள் குங்குமம் வைத்தும், செவ்வரளி சாற்றியும் அபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி வர தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும்.
  3. ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட தீராத கடன் பிரச்சனை தீரும்.
  4. நரசிம்மர் எந்த கோலத்தில் இருந்தாலும் அவரை தரிசனம் செய்தால் திருமணத் தடை விலகும், கண் திருஷ்டி நீங்கும், கடன் பிரச்சனை தீரும்.
  5. கோயிலில் உள்ள திரி சூலத்திற்கு குங்குமம் வைத்து எலுமிச்சை பழம் குத்தி வழிபட கண் திருஷீ நீங்குவதோடு செய்வினை கோளாறும் நீங்கும்.
  6. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து வழிபட்டால் பூதகண சேஷ்டைகள் விலகும்.
  7. கொடுத்த கடன் வசூலாக சிவன் கோயிலில் இருக்கும் பைரவருக்கு தொடர்ந்து 8 செவ்வாய்க் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
  8. சக்கரத்தாழ்வார் சன்னதியில் 21 வாரம் செவ்வாய்க்கிழமை அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூலாகும். அதே போன்று சக்கரத்தாழ்வார் சன்னதியை நெய் தீபம் ஏற்றி 12 முறை சுற்றி வர வழக்கு சாதகமாகும். இதனை ஒரு மண்டலம் செய்து வர வேண்டும்.
  9. சனி பாதிப்பு நீங்க ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வர வேண்டும்.
  10. சிவன் கோயிலில் கால பைரவரையும், விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நீங்கும்.
  11. சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னதியில் தேய்ங்காய் உடைத்து 2 மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்ற சனி பாதிப்பு நீங்கும்.
  12. வெள்ளி தோறும் நவக்கிரக சுக்கிர பகவானுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபமேற்றி வழிபட கணவன் மனைவிக்கிடையில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
  13. மாதந்தோறும் உத்திர நட்சத்திர நாளன்று சிவபெருமானுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
  14. சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட சங்கடங்கள் தீரும்.
  15. ரோகிணி நட்சத்திர நாளில் இரட்டைப் பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.
  16. செவ்வாய் தோறும் முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட 3 மாதத்தில் வேலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
  17. அவிட்ட நட்சத்திர நாளில் முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்து வழிபட விபத்துக்களில் இருந்து தப்பிக்கலாம்.
  18. ருத்ராட்சம், சாளக்கிராமம், வில்வம், துளசி வழிபாடு செய்ய செய்வினை அண்டாது.
  19. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  20. ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு நேரம் மட்டும் விரதமிருந்து மாலையில் சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட 192 நாட்களில் கருத்தரிப்பு
  21. ஏழை எளியவருக்கு தங்களால் முடிந்த தானம் கொடுத்தல், பூஜை நடக்காமல் இருக்கும் கோயில்களில் பூஜை நடக்க உதவி செய்தல், அனாதை பிணங்களின் தகனத்திற்கு உதவி செய்தல் ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
  22. பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதியை வலம் வந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − five =

Most Popular