Monday, October 23, 2023
HomeAstrological Remediesகடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

பச்சைக் கற்பூரத்துடன் இந்த 1 பொருளை சேர்த்து பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால், தீராத கடன் தண்ணீரோடு கரையும்….

நமக்கு இருக்கக்கூடிய கடன் அனைத்தும் கரைந்து போக வேண்டும். அதற்கு ஒரு சக்திவாய்ந்த பரிகாரம் வேண்டும் என்பவர்களுக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக அமையும்‌. மிக மிக எளிமையாக நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து இந்த குறிப்பை பின்பற்றி வருபவர்களுக்கு நிச்சயம் கடன் தொல்லை இருக்காது. கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுக்க கூடிய வாய்ப்புகள் வரும். கடன் கொடுத்தவர் உங்களைத் தொல்லை செய்யாமல் நிதானமாக வாங்கிக்கொள்வார். கடனால் உங்களுடைய நிம்மதி கெடாது.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான மஞ்சளை போட வேண்டும். அதில் இரண்டு சிட்டிகை பச்சை கற்பூரத்தை போட்டு கொஞ்சமாக பன்னீர் ஊற்றி இதை பிசைந்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து ஒரு வெற்றிலையில் மேல் வைக்க வேண்டும். அந்தப் பிள்ளையாருக்கு ஒரு குங்குமப் பொட்டு வைத்து விடுங்கள்.

அதன்பின்பு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்தப் பிள்ளையாருக்கு முன்பு அமர்ந்து, ‘எல்லோ கஷ்டங்களையும் தீர்த்து வைக்கும் விநாயகா என்னுடைய கடன் பிரச்சனையை தீர்த்து வைக்க நீயே துணை’ என்று விநாயகரின் பாதங்களை சரணடைந்து ஆத்மார்த்தமாக மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளுங்கள்.

இறுதியாக வழக்கம் போல கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். மறுநாள் காலை வரை இந்தப் பிள்ளையார் அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும். அடுத்த நாள் காலை புதியதாக பூஜை செய்யும்போது ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரில் இந்த விநாயகரை கரைக்க வேண்டும். கரைக்கும் போது உங்களுடைய கடனும் சீக்கிரம் கரைந்து போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கரையுங்கள்.

பிள்ளையாரை கரைத்த தண்ணீரை செடி கொடிகளில் ஊற்றலாம் அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம். வெளியில் எங்கேயும் இந்த தண்ணீரை ஊற்ற முடியாது என்றால் சமையலறை சிங்கில் ஊற்றி விடுங்கள். நாற்பத்தி எட்டு நாள் இதை மட்டும் தான் செய்யப் போறீங்க ஆத்மார்த்தமான, ஒருநிலையான மனதோடு இதை செய்தால் கடன் தீரும் என்று நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த உலகத்தில் கடன் இல்லாத மனிதராக நிச்சயம் நீங்களும் மாறுவீர்கள்.

நம்பிக்கையோடு நாம் எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி நம் பக்கம் இருக்கும். இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு முடிந்தால் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு விநாயகர் கோயிலுக்கு சென்று சங்கடஹர சதுர்த்தி அன்று குறிப்பாக தேய்பிறை அன்று வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் மூன்று அல்லது ஐந்து தேங்காயை சிதறு தேங்காய் உடைத்தால் உங்கள் கஷ்டங்கள் நிச்சயம் சிதைந்து போகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

Most Popular