தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட்டால் தோஷம் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
பட்டு சார்த்துதல், தானியம் மற்றும் திவ்ய ஆபரணங்கள் வழங்கினால் தோஷம் விலகி கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு உண்டாகும்.
உப்பு காணிக்கை செலுத்தினால் சர்ப்ப தோஷம் விலகி உடல் நலம் பெறும்.
மஞ்சள் காணிக்கை செலுத்தினால் சர்ப்ப தோஷத்தின் விஷத்தன்மை நீங்கும்.
நல்ல மிளகு, கடுகு, சிறு பயிறு போன்றவற்றை நைவேத்தியமாக செலுத்தினால் நாகதோஷத்திலிருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வு பெறலாம்.
மஞ்சள் பொடி, பால் நைவேத்தியம் படைத்தால் தோஷத்தினால் ஏற்பட்ட குறைகள் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தோஷ பரிகாரத்திற்கு மஞ்சள் பொடி காணிக்கை, பால் – பழம், பால் பாயாசம், அப்பம், இளநீர், பூக்கள், அவல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.
ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.
காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.
புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோவில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.
நவகிரகத்தில் உள்ள ராகு கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.
சிவன் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும்.
பெருமாள் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகு காலத்தில் வணங்குவது நல்லது.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும்.
தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.
ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடவும்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும்.
பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம்.
ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.
வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடவும். எலுமிச்சம் பழம் மாலையில் 16 அல்லது 32 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும்.
அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடவும்…
