Sunday, October 15, 2023
HomeAstrological Remediesஇந்த 4 பொருட்கள் கண்ணுக்குத் தெரியாத கண்திருஷ்டியை கூட பஸ்பமாக்கிவிடும்

இந்த 4 பொருட்கள் கண்ணுக்குத் தெரியாத கண்திருஷ்டியை கூட பஸ்பமாக்கிவிடும்

மனிதனாகப் பிறவி எடுத்த எவராலும், கண் திருஷ்டியில் இருந்து தப்பித்து விட முடியாது. ஏனென்றால் கண்ணுக்கு தெரியாத, இந்த கண் திருஷ்டிக்கு பலம் அவ்வளவு அதிகம். நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை கூட, திடீரென்று வாழ்க்கையின் அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் சக்தியானது இந்த கண் திருஷ்டிக்கு உண்டு என்றால், அது பொய்யாகாது. இந்த கண் திருஷ்டியினை சுலபமான முறையில் கண்டுபிடித்து, சுலபமான ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் இந்த பாதிப்பிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும். அது என்ன பரிகாரம், என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகார முறையை நம் பாட்டிமார்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தது தான், என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

பொதுவாக திருஷ்டி கழிக்க பயன்படுத்தக்கூடிய, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகின்றோம். அந்த பொருட்களை முறையாக எந்த கணக்கில் எடுக்க வேண்டும் என்பதைப்பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதில் முதல் பரிகாரமாக ஞாயிற்றுக்கிழமை அன்று 3 வரமிளகாய், கடுகு சிறிதளவு, உப்பு சிறிதளவு, இவை மூன்றையும் உங்களது இடது கையில் எடுத்துக் கொண்டு, உங்கள் வீட்டு உறுப்பினர்கள் அனைவரையும் ஒருசேர, கிழக்கு பார்த்தபடி, அமர வைத்து, ஏழு முறை இடதுபக்கமாக சுற்ற வேண்டும். அதன் பின்பு உங்கள் கையில் இருக்கும் பொருட்களை அடுப்பில் எரியும் நெருப்பில் போட்டு விடவும். அதுதான் முறை. ஆனால், இந்த காலகட்டத்தில் அடுப்பு இல்லை என்பதால், சிறிய பாத்திரத்தில் கொட்டாங்குச்சியை எரிய வைத்து அதில் உங்கள் கையில் இருக்கும் பொருட்களை போட்டு விடுங்கள்.

அதிலிருந்து காரமான நெடி வரவில்லை என்றால் கண் திருஷ்டி அதிகம் இருக்கு என்பதை குறிக்கும். நெடி வந்தால், கண் திருஷ்டி இல்லை என்பதை குறிக்கும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு கண் திருஷ்டி இருக்கிறதா? இல்லையா? என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். இது வீட்டில் செய்யக்கூடிய ஒரு திருஷ்டி எடுக்கும் முறை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − five =

Most Popular