Tuesday, October 17, 2023
HomeAstrological Remediesகடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

தேய்பிறை சதுர்த்தி நாளன்று இரட்டை பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு நீங்கும். சிவபெருமானை பிரிந்த பார்வதி தேவி தனியாக தவம் செய்யும் நிலை வந்தது. அப்போது விநாயகர் தன்னைப் போன்ற வடிவத்தை உருவாக்கி, அதனை சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தனது பெற்றோர் ஒன்று சேர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.

இதன் காரணமாக மயிலாடுதுறை அருகில் திருவேள்விக்குடித் திருத்தலத்தில் சங்கல்ப விநாயகர் (இரட்டை விநாயகர்) என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆதி இரட்டை விநாயகர் என்று அழைக்கப்படுபவரும் இவர் தான். இதே போன்று திருச்சி பலக்கரைப் பக்கத்திலும் இரட்டை பிள்ளையார் அருள் புரிகிறார். தேய்பிறை சதுர்த்தி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், பஞ்சமி திதியும் இந்த இரட்டை விநாயகருக்கு உரியதாக கருதப்படுகிறது.

தேய்பிறை சதுர்த்தி நாளன்று இரட்டை பிள்ளையாருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபட செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு நீங்கும். கார் அரிசியில் மோதகம் செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும். திருவோண நட்சத்திர நாளன்று இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

திருவாதிரை நட்சத்திர நாளில் வில்வம் கொண்டு மாலை சாற்றி வழிபட தீராத நோயு தீரும். விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும். சனிக்கிழமைகளில் கனி வகைகளில் ஏதாவது ஒன்றைச் சம்ர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

தஞ்சை, திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம். இரட்டை பிள்ளையாருக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபட திருமணத் தடை நீங்கும். சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.

மேலும் ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர்கோயில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோயில், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோயில் திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − eleven =

Most Popular