Thursday, October 19, 2023
HomeAstrological Remediesகாகம் தலையில் தட்டினால் உடனடியாக செய்யவேண்டிய பரிகாரம்

காகம் தலையில் தட்டினால் உடனடியாக செய்யவேண்டிய பரிகாரம்

காகமானது நம்முடைய தலையில் தட்டினால், நமக்கு வரக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்துகிறது என்பதை குறிக்கின்றது.

காகம் தலையில் தட்டினால் உடனடியாக செய்யவேண்டிய பரிகாரம்
காகம் தலையில் தட்டினால் உடனடியாக செய்யவேண்டிய பரிகாரம்
சிலருக்கு, காகம் தலையில் தட்டி விட்டு சென்றால், என்ன நடக்கும் அப்படி நம் தலையில் காகம் தட்டி விட்டு சென்றபின்பு, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய குழப்பம் ஆழ் மனதுக்குள் இருந்து தான் வருகிறது. இந்த குழப்பத்திற்கு தெளிவான தீர்வு காண்பதற்காகவே இந்த பதிவு.

காகத்திற்கு மட்டுமல்ல பொதுவாகவே எந்த ஒரு பறவைக்கும் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய, எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தன்மை இருக்கின்றது. குறிப்பாக முன்னோர்கள் வழிபாட்டிற்கும் காகத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இது நாம் எல்லோரும் அறிந்ததே. இப்படிப்பட்ட காகம் சனீஸ்வரனின் வாகனமாகவும் உள்ளது. இதனால் தலையில் காகம் தட்டியவுடன் பேராபத்து நமக்கு வந்து விடுமோ, என்று நிறைய பேர் மனதில் சஞ்சலம் வந்துவிடும்.

காகமானது நம்முடைய தலையில் தட்டினால், நமக்கு வரக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்துகிறது என்பதை குறிக்கின்றது. சிலர் சொல்லுவார்கள், காகம் தலையில் தட்டினால் உடனே மரணம் ஏற்பட்டு விடும் என்று! அப்படியெல்லாம் நினைத்து பயப்பட வேண்டாம். காகம் தலையில் தட்டும் பட்சத்தில் உங்களுக்கு ஏதோ பிரச்சினை காத்துக் கொண்டிருக்கின்றது. உங்களை நீங்களே உஷார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் நமக்கு வலியுறுத்துகிறது என்பது அர்த்தமாகும்.

காகம் தலையில் தட்டி விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வரப்போகின்ற ஆபத்தில் இருந்து எப்படித் தப்பிக்கப் போகின்றோம். உங்கள் வீட்டு குல வழக்கப்படி, குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதன்படி உங்கள் வீட்டிலேயே குடும்பத்தோடு சேர்ந்து, வழிபாடு செய்து விடவேண்டும்.

உங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதில் ஏதேனும் குறை இருந்தால் கூட, அந்தக் குறையை காகம் ரூபத்தில் வந்து முன்னோர்கள் நமக்கு நினைவு படுத்துவார்கள். அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு வாழை இலை போட்டு, நிறைவான படைகளை போட்டு, மனதார, ஏதாவது குற்றம் இருந்தால் அதை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது.

வீட்டில் குலதெய்வ படத்திற்கு முன்பாக மண் அகல் தீபம், நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி வையுங்கள். தீபம் ஏற்றுவதை இத்தனை நாட்கள் என்றுதான் கணக்கு கிடையாது. தொடர்ந்து ஏற்றுவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. நம் குடும்பத்திற்கும், நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. குடும்பம் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். கோவிலுக்கு சென்று நவகிரஹ சன்னிதானத்தில் எள் தீபம் ஏற்றுவது சிறந்த பலனை கொடுக்கும்.

இனி காகம் தலையில் தட்டி விட்டால், அதனால் ஏதாவது பேர் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற மன குழப்பத்தில், மன அழுத்தத்தில் நீங்களே உங்களுக்காண பிரச்சினைகளை உண்டாக்கி கொள்ளாதீர்கள். நம்முடைய மறைந்த முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் என்றைக்குமே நமக்கு தீங்கு விளைவிக்காது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + seventeen =

Most Popular