மூலம் நட்சத்திர தோஷ பரிகாரம்

169

 

மூல நட்சத்திரத்தை பற்றியும், மூல நட்சத்திரத்தின் தோஷங்களை நீக்குவதற்கான பரிகாரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மூலம் நட்சத்திர தோஷ பரிகாரம்மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் நட்சத்திர தோஷத்தை போக்கவும், அதிகமான நன்மைகளை பெறவும் இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினந்தோறும் காலையில், குளித்து முடித்ததும், விநாயக பெருமானை வழிபட்ட பின் மற்ற காரியங்களை செய்ய தொடங்குவது நன்மைகளை உண்டாக்கும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களால் முடிந்த போது அடர்பழுப்பு(பிரவுன்) நிற ஆடைகளை வசதியில்லாதவர்களுக்கு தானம் அளிப்பது மூல நட்சத்திர தோஷத்தை போக்கும்.

கோவில்களில் திருவிழாக்கள், உற்சவங்கள் போன்றவற்றை தொடங்கும் போது கோவிலில் ஏற்றப்படும் கொடியை உங்கள் செலவில் செய்து கோவிலுக்கு காணிக்கையாக கொடுப்பது சிறந்த பரிகாரமாகும்.மூல நட்சத்திரத்தில் உங்களுக்கு குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் குழந்தை பிறந்த 27 ஆம் நாளில் நட்சத்திர சாந்தி பூஜை செய்வதால் குழந்தை மூல நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் பிறந்திருந்தாலும், எதிர்கால வாழ்க்கையில் பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் காக்கும். பூஜை சடங்குகளை செய்யும் வேதியர்களுக்கு அரிசி, ஆடை போன்றவற்றை தானமாக அளிப்பது நற்பலன்களை தரும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பல ஆண்களும் பெண்களும் திருமணம் தடை தாமதங்கள் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சித்தர்கள் கூறிய ஒரு எளிய பரிகாரம் உள்ளது. சிவன் கோயில் தல விருட்சத்தின் வேர்ப்பகுதியில் இருக்கும் மண் ஒரு கைப்பிடி, விநாயகரின் அம்சமாக இருக்கும் யானை கால் பட்ட மண் ஒரு கைப்பிடி, பால் சுரக்கும் பசுமாடு கால் பட்ட மண் ஒரு கைப்பிடி, பாம்பு புற்று மண் ஒரு கைப்பிடி, வயல்வெளி அல்லது கண்மாயில் இருக்கின்ற நண்டு வளை மண் ஒரு கைப்பிடி. கண்மாய் அல்லது ஊருணியில் இருக்கும் மண் ஒரு கைப்பிடி, ஆறு அல்லது கடற்கரை மண் ஒரு கைப்பிடி என எடுத்துவைத்து கொண்டு, மேற்கண்ட மண்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் உடல் முழுவதும் இந்த மண்ணை நன்கு பூசிக்கொண்டு 45 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் மூல நட்சத்திர தோஷம் நீங்கப் பெற்று, இந்த குளியலை மேற்கொள்ளும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 90 நாட்களுக்குள் திருமண நிச்சயம் நடக்கும்.