நவக்கிரக பரிகார கோயில்களை எப்படி வழிபடுவது? பகுதி 2!
6. சுக்கிரன்: கஞ்சனூர்:
சுக்கிர தோஷம், பலஹீன, உள்ளவர் இங்குள்ள மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
திருநாவலூர்:
இங்குள்ள பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சுக்கிர தெசை பாதிப்புக்கும் உரிய ஸ்தலம்.
7. சனி: திருநள்ளாறு:
ஜாதகப்படி 7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம் சனி ஏற்படும் காலங்களில் இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும் போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோசம் நீங்கும்.
குச்சனூர்:
7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம சனி , கண்டச்சனி ஆரம்பிக்கும் பொழுது இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானின் பிரம்ம ஹாத்தி தோசம் நீங்கிய ஸ்தலம்.
சேந்தமங்கலம்:
சனி நடைபெறும் காலங்களிலும்சனி தெசை, சனி புத்தி நடைபெறும் காலங்களிலும் இங்குள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சனீஸ்வரரை சனிக்கிழமை வழிபட வேண்டும். சேலம், நாமக்கல் அருகில் கொல்லிமலை செல்லும் வழியில் 12 கிமீ தூரத்திலுள்ளது.
திருவாதவூர்:
சனி பாதிப்புள்ள்வர் இங்குள்ள சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட வேண்டும். சனி, ஈஸ்வரனைப் பிடிக்க முயன்ரு, கால் முடமாகி, கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம்.
ஸ்ரீ வைகுண்டம்:
மனிதனின் மன நிம்மதியை நிர்ணயிப்பவர் சனி பகவான். அவரவர் செய்யும் வினையைப் பொறுத்து நல்லதயும் கெட்ட்தையும் தருவார். சனிபகவானின் அம்சத்துடன் சிவ பெருமான் இத்தலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம். திருநல்லாறு சனீஸ்வரன் திருக்கோவிலுக்கு ஈடானது இக்கோவில்.
திருநாரையூர்:
சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி. ஜேஷ்டா தேவி ஆகியோருடன் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடி மரம் இங்கே சனீஸ்வரருக்கு உண்டு. பலிபீடமும், காகவாகனமும் கொண்ட்து சனீஸ்வரரின் தனிச்சிறப்பு. தம்பதி சமேதராய் மட்டுமல்ல, இந்தக் கோயிலில் சனீஸ்வரர் தனது இரு மகன்களுடன் [குளிகன், மாந்தி] குடும்ப சமேதராய் அருள் புரிகிறார்.
8. ராக: திருநாகேஸ்வரம்:
ராகுவினால் ஏற்படும் அனைத்து தோசங்களினால் திருமணத்தடை, பத்ர தோசம், மாங்கல்ய தோசம் ஏற்படும். இங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி, ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுவிற்கு பாலாபிசேகம், அர்ச்சனை செய்து வழிபட நாக தோசம் நீங்கும்.
ஸ்ரீ பெரும்புதூர்:
ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ மத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள இத்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீ மத் ராமானுஜரையும், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ யதிராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோசம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் பரிகார தோசம். செங்கல்பட்டுக்கு மிக அருகாமையில் இந்தக் கோயில் உள்ளது.
கதிராமங்கலம்:
இங்குள்ள வன துர்க்கை முன் பக்கம் பார்ப்பதற்கு பென் உருவமாகவும் பின்பக்கம் பார்ப்பதற்கு நாகம் படம் எடுத்த்து போன்றும் தோன்றும். கம்பர் வழிபட்ட ஸ்தலம். ராகு, கேது தோசம், கால சர்ப்ப தோசம் உள்ளவர் துர்க்கைக்கு அபிசேகம் செய்து வழிபட கிரக தோசம் நீங்கும். இத்துர்க்கை ல்லித சகஸ்ர நாமத்தில் வரும் வித்யா வன துர்க்கையாகும். கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 3 கிமீ தூரத்திலுள்ளது.
9.கேது: திருக்காளத்தி:
பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம். கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிசேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும். கால சர்ப்ப தோச பரிகார ஸ்தலம்.
கீழ்ப்பெரும் பள்ளம்: இங்குள்ள நாகநாத சாமி கோவிலில் தனி சன்னதியில் உள்ள கேதுவை வழிபட கேதுவினால் ஏற்படும் தோசம் நீங்கும்.
வழித் தடம்:
மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ளது.
