வீட்டில் பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

229

வீட்டில் பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

காசு, பணம், துட்டு தான் இந்த உலகத்தில் முக்கியம். மனிதனாக பிறந்த ஒவ்வொரும் காசு, பணத்திற்காக தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் நாம் கஷ்டப்படுவதும் அதற்காகத்தான். வரவு எட்டனா, செலவு பத்தனா என்று பழமொழி கூட சொல்வார்கள். அந்தளவிற்கு நாம் என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் வரவுக்கு மீறிய செலவுதான் வரும். வந்த பணமும் நம்மிடம் இருப்பதில்லை. வந்த வேகத்திலேயே சென்றுவிடும்.

அப்படியிருக்கும் போது வந்த பணத்தை எப்படி நம்மிடமே தங்க வைக்க என்ன பரிகாரம் செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். தினந்தோறும் காலையில் எழுந்து வீட்டுக் கதவை திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று மூன்று முறை கூற வேண்டும். மேலும், பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் காலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வாசலில் மாட்டுச் சாணம் தெளித்து, அரிசி மாவு கொண்டு கோலம் போட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

எப்போதும், பெண்கள் அதிகாலை நேரத்திலேயே எழுந்துவிட வேண்டும். அப்படி செய்யும் போது அவர்கள் யார் முகத்தையும் பார்க்காமல் வாய் கொப்பளித்துவிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறிந்தளவு தண்ணீரில் மஞ்சள் கலந்து அதனை வீடு முழுவதும் தெளித்துவிட வீட்டில் துர்சக்திகள் அண்டாது. கண் திருஷ்டியும் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும்.

இதே போன்று வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு தூங்குவதற்கு முன்னதாக வீட்டிலுள்ளவர்களுக்கு 3 சூடம் கொண்டு திருஷ்டி சுற்றி அதனை வீட்டு வாசலில் ஏற்றி வைக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.

வாரத்திற்கு ஒரு முறை வியாழன் தோறும் வீட்டு பூஜையறையில் வெண்கல தட்டில் குபேரன் படமோ, சிலையோ வைத்து, அதில், 5 ரூபாய் நாணயங்களை போட்டு வைக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக நெய் தீபம் ஏற்றி, 5 ரூபாய் நாணயங்களை கையால் எடுத்து மீண்டும் மீண்டும் வெண்கல தட்டி போட வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக வீட்டில் செல்வம் நிலைத்து நிற்கும். ஏனென்றால், செல்வத்திற்கு அதிபதி குபேரன்.

வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும். தினந்தோறும் மாலையில் இருட்டுவதற்கு முன்பாகவே விளக்கேற்றிட வேண்டும். விளக்கு ஏற்றிய பிறகு வெளியில் செல்லக் கூடாது. வீட்டில் விளக்கு வைத்த பிறகு வீட்டை விட்டு எதையும் கொண்டு செல்லக் கூடாது. குப்பையை கூட வெளியில் வீசக் கூடாது.

வெள்ளிக்கிழமை நாளில் வீட்டிற்கு உப்பு வாங்கி வந்தால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

தண்ணீரையும், நெருப்பையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

ஒவ்வொரு நாளும் ஒரு பிடி அரிசியை பெரிய பாத்திரத்தில் எடுத்து வைத்து இறைவனுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.