பர்ஸில் பணம் எப்பவும் இருக்க வேண்டுமா?

394

இந்த ஒரு 1 வேரை மட்டும் 30 நாட்கள் உங்களோட பர்ஸில் வைத்து தான் பாருங்களேன்!

நேர்மறை ஆற்றலும், நேர்மறை எண்ணங்களும், நேர்மறையான செயல்பாடும், பணத்தை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்ற சிந்தனை சரியானதுதான். ஆனால் பலபேர் நேர்மறை எண்ணங்களை கொண்டிருந்தாலும், அவர்களிடம் பணம் வந்து சேரவே சேராது. பொருளாதாரரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களை சுற்றி இருக்கும் அதிர்வலைகள் தான். சிலபேருக்கு எண்ணம் நேர்மறையாக இருந்தாலும், அவர்களை சுற்றி இருக்கும் அதிர்வலைகள் சரியாக இருக்காது.

இப்படிப்பட்ட கெட்ட அதிர்வுகளை மாற்றக்கூடிய சக்தியானது சில மூலிகை செடிகளுக்கு உண்டு. அதிலும் குறிப்பாக அந்த செடியின் வேரை முறையாக எடுத்து பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி இருக்கும் அதிர்வலைகளை நம்மால் மாற்றிவிட முடியும். அப்படிப்பட்ட ஒரு வேர் தான், நொச்சிச் செடி வேர். இந்த செடியின் வேரை முறையாக, எப்படி எடுத்து பயன்படுத்தினால், என்ன பயன் அடையலாம், என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்மை சுற்றி இருக்கும் அதிர்வெண்னையும், அதிர்வலைகளையும் மாற்றக்கூடிய சக்தியானது சில மூலிகை வேர்களில் உள்ளது என்பதை கண்டறிந்தவர்கள் சித்த புருஷர்கள். சித்தர்களால் சொல்லப்பட்ட இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்வதன் மூலம், நிச்சயமாக நல்ல பலனளிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் 30 நாட்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன்! பொருளாதார சூழ்நிலை மந்தமாக இருப்பவர்களுக்கு கூட, முப்பது நாட்களில் நல்ல ஒரு பதிலை சொல்லும் பரிகாரம் தான் இது. மிக சுலபமான பரிகாரம்.

இந்த நொச்சி செடியின் வேருக்கு அதிகமான சக்தி உள்ளது. இந்தச் செடியின் வேரினை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் அதாவது, காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள், இப்படி வரக்கூடிய குரு ஹோரை நேரத்தை பார்த்து நொச்சி செடி வேர் பகுதியில் இருந்து, சிறு துண்டு வேரை உங்கள் கைகளாலேயே கிள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுதம் படக்கூடாது.

அப்படி அந்த செடியிலிருந்து வேரை எடுப்பதற்கு முன்பாக, மனதார அந்த செடியிடம், பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ‘இந்த செடியிலிருந்து எடுக்கக்கூடிய வேர், என்னுடைய முன்னேற்றத்திற்காக எடுக்கப்படுகிறது’ என்ற படியும், எடுப்பதற்காக மன்னிப்பையும் வேண்டி கேட்டுக் கொண்டு, அதன்பின்பு வேரினை எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்படியாக இந்த செடியில் இருந்து நீங்களே வேரை கிள்ளி எடுத்து கொள்ளலாம், அப்படி உங்களால் முடியாவிட்டால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்தால், அவர்கள் அந்த செடியில் இருந்து வேரை எடுத்து வந்து தருவார்கள். நீங்களே செடியிலிருந்து வேரை எடுத்தாலும், நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தாலும், அந்த வேரை சிறிதளவு மஞ்சள் நீர் ஊற்றி, அபிஷேகம் செய்து, தூபம் காட்டி அதன் பின்பு அந்த வேரை எடுத்து உங்களது பர்ஸ்ஸில் வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த வேர் 30 நாட்கள் வரை உங்கள் பர்ஸிலேயே இருக்கட்டும். நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்து, உங்களிடம் பணம் சேர்வதை உங்களால் உணரமுடியும். 30 நாட்களுக்குப் பின்பு அந்த வேரினை, மேற்குறிப்பிட்ட முறைப்படி மாற்றிவிட வேண்டும். நம்பிக்கையோடு, நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். கட்டாயம் பலன் உண்டு. பல பேர் இந்த பரிகாரத்தை சோதித்து பலன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.