பணப்பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!
பொதுவாக எந்தவொரு நல்ல காரியத்தை தொடங்கினாலும் நல்ல நாள், நட்சத்திரம், நேரம் காலம் பார்த்து தான் செய்வார்கள். அதிலேயும், வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் எந்த காரியம் செய்தாலும் வெற்றியாகும். அந்த வகையில், பணப்பிரச்சனை தீர வெள்ளிக்கழமை அன்று செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
உயிரணுக்கள் அதிகமாக உற்பத்தியாவது வெள்ளிக்கிழமை தான் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் மனதார என்ன வேண்டுகிறோமோ, அது நமது நாடி நரம்பு என்று நமக்குள்ளாக ஆழமாக பதிந்து விடுகிறது. ஆகையால், வெள்ளியன்று நாம் செய்யும் எந்த காரியமும் எளிதில் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
சரி, எப்படி பணப்பிரச்சனையை சரிசெய்யலாம் என்று பார்க்கலாம். உங்களிடம் இருக்கும் எந்த நோட்டை வைத்து வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொள்வோம். முதலில் 5 கிராம்பு, பட்டை துண்டி சிறிதளவு, பச்சைக் கற்பூரம் 2, வசம்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கிராம்பு, வசம்பு, பச்சைக் கற்பூரம், பட்டை ஆகியவற்றை நூறு ரூபாய் நோட்டில் வைத்து மடித்துக் கொள்ள வேண்டும். அதனை அப்படியே ஒரு ஒயிட் பேப்பரில் வெளியில் தெரியாமல் பொட்டலமாக மடித்துக் கொள்ள வேண்டும்.
இது தவிர, வெள்ளிக்கிழமை அன்று காலையில் 6 மணியிலிருந்து 6.15 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 1 மணியிலிருந்து 1.15 மணிக்குள்ளாகவும், இரவு 8 மணியிலிருந்து 8.15 மணிக்குள்ளாகவும் உப்பு வாங்க வேண்டும். இந்த 3 நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் தான் எப்போதும் வெள்ளிக்கிழமை நாளில் உப்பு வாங்க வேண்டும்.
அப்படி வாங்கி வந்த உப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மகாலட்சுமி தேவியை நினைத்து ஓம் மகாலட்சுமியே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு அந்த உப்பை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுவிட வேண்டும். இதோடு, மடித்து வைத்துள்ள ரூபாய் நோட்டையும் இந்த பாத்திரத்தில் போட்டு வீட்டு பீரோவில் வைத்துவிட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது விரைவில் முடிவுக்கு வரும். பணப்பிரச்சனை தீர்ந்து சொத்து சுகம் கூடும் என்பது ஐதீகம்.
