Sunday, October 15, 2023
HomeAstrological Remediesசனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் - பகுதி 1!

சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் – பகுதி 1!

சனி பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் – பகுதி 1!

சனிபகவான் பீடை விலக வழி பத்மபுராணம் நூல் பொறுமையாக படிக்க வேண்டிய பகவான் ஈஸ்வரரே உபதேசித்த அற்புத விஷயம்…

சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தால் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும், இதை தங்கள் வாயிலாக கேட்டறிய விரும்புகிறேன் என்று நாரதர் கேட்டார். பரமேஸ்வரன் கூறினார். நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள். ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும். சனிபகவான் சாதாரணமானதென்று எண்ணக் கூடாது. சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்றவர் சனீஸ்வரன்.சூரிய பகவானுடைய மகன் கறுத்ததேகம் உடையவன். அவனால் உண்டாகும் துன்பத்தைவென்ற அரசனுடைய கதையைக் கூ றுகிறேன் கேள் என்றார்.

ரகு குலத்தில் பிறந்த அரசன் தசரதன் மிகவும் பிரபலமானவன். மகா பராக்கிரம சாலியானவன். ஏழு கண்டங்களுக்கும் அதிபதி .அந்த மன்னன் ஆண்டு வரும் காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் வந்தது. சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும்.

அதை நினைத்து தேவர்கள், அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்குக் கொண்டிருந்தார்கள். அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். இதைத் தடுப்பது என்பது பிரம்மவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.

ஆனால் தசரதன் சும்மா இருக்கவில்லை. எப்படியாயுனும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக வஜ்ஜிரக்கவசம் தரித்து தன் வில்லையும், அநேகவிதமான பானங்களையும் எடுத்துக் கொண்டு நட்சத்திர மண்டலத்தில் பிரவேசித்தான்.

சூரிய மண்டலத்திற்கப்பால் வெகு துரத்தில் பிரகாசித்த ரோகிணி நட்சத்திரற்குப் பின் பாகத்தில் தன்னுடைய ரதத்தில் அமர்ந்தபடி அந்நட்சத்திரதையே பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர். அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான புரவிகளோடு கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது.

தசரதன் ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் .வில்லை வளைத்து காதுவரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார். தேவர்கள், அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான்.

சனிபகவான் புன்னைகை புரிந்தபடி ராஜராஜனே, உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தேவர், அசுரர், மனிதர்களில்லோ, சித்தர், வித்யாதரர், கந்தர்வர்களிலோ, யட்சர்கள், ராட்சஸர்கள், நாகர்களிலோ யாருமே என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் கிடையாது. என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள் .

ஏ ராஜேந்திரா, நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்.

தசரதன் சனிபகவானைப் பார்த்து ஏ செளரி தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது. சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது. முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன் என்று கூறினார். அவ்வாறே ஆகுக என்று கூறி சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டிய வரம் எதுவாயினும் கேள் .உனக்கென்று எதையும் கொடுக்காமல் செல்ல மாட்டேன் அதனால் உனக்கு வேண்டியதைக் கேள் என்றுகூறினார்…

தசரதன் சனிபகவானைப் பார்த்து ஆதவன் மைந்தனே ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தங்கள் பின்னம் செய்வதால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடிய கொடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நீண்ட பஞ்சக்காலமும் ஏற்படக்கூடாது அதையே நான் தங்களிடமிருந்து முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன் என்று தசரதன் மீண்டும் கூறினார்.

சனிபகவான் தசரதனை பார்த்து சொன்னர் அதைத்தான் முன்பே கொடுத்து விட்டேனே, என்னிடமிருந்து இந்த வரம் பெற்றதால் உன்னுடைய கீர்த்தி உலகம் உள்ளவரைக்கும் நிலைத்திருக்கும. மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும். உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன். வேறு என்ன வரம் வேண்டும் கேள் என்றான் சனிபகவான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − eleven =

Most Popular