Wednesday, November 1, 2023
HomeAstrological Remediesஆயுள் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

ஆயுள் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

ஆயுள் பலம் அதிகரிக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

தேனியில் கோடாங்கிபட்டி என்ற ஊரில் உள்ளது சித்திரபுத்திரர் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நாளில் திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் சித்திரபுத்திர நாயனாருக்கு காஞ்சிபுரத்தை அடுத்து இங்கு மட்டும் தான் தனி கோயில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் ஆறுமுக நயினார் கோயில், கம்பராயப்பெருமாள் காசி விஸ்வநாதர் கோயில், அருள்மிகு திருமலைராயப்பெருமாள் கோயில், கவுமாரியம்மன் கோயில், சாமாண்டியம்மன் கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.

நவக்கிரகங்களில் கேதுவுக்கு அதிபதி சித்திரகுப்தன் தான். ஆகையால் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நீங்கும். சித்ரா பௌர்ணமி நாளில் பெண்கள் விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு வேண்டிக்கொண்டால் ஆயுள் நீங்கும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு வஸ்திரம் சாற்றி பூஜைகள் செய்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காமதேனுவின் மகன்: இவர் மறுபடியும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி நாளன்று பிறந்தார். இதன் காரணமாகவும், பராசக்தி வரைந்த சித்திரத்திலிருந்து தோன்றியதாலும் சித்திரபுத்திரன் என்று அழைக்கப்படுகிறார்.

எனினும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக உள்ளது. இந்திரன் அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட இவர், சிவனை வழிபட்டு ஞானதிருஷ்டி பெற ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை சிவபெருமான் இவரிடம் ஒப்படைத்தார். சித்திரகுப்தர் பிறந்த சித்ரா பௌர்ணமியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் நமது பாவங்களை குறைப்பார் என்பது நம்பிக்கை. இவரது மனைவி பிரபாவதிக்கு இங்கு சன்னதி உள்ளது. பசுவின் கர்ப்பத்திலிருந்து பிறந்ததால் சித்ரா பௌர்ணமியன்று பசும்பால், பசுந்தயிர், பசுநெய் ஆகியவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. அன்று வாசலிலும், பூஜை அறையிலும் கோலமிட்டு சித்திரகுப்த ஸ்லோகம் சொல்ல அவர் நமது இல்லத்துக்கு வந்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பார் என்பது நம்பிக்கை.

சித்திரம் என்றால் ஆச்சரியமானது. குப்தம் என்றால் ரகசியம் என்று பொருள். எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதிடும் சித்திரபுத்திரரின் கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமாக இருக்கும். எனவே தான் இவர் சித்திரகுப்தன் என்று அழைக்கப்படுகிறார். சிவன், ஜீவராசிகள் செய்யும் காரியங்களை கணக்கு எழுதுகிறார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அகில உலகிற்கும் மூல காரணமாகிய சிவன் ஏடும், எழுத்தாணியும் கொண்டு தாமே கணக்கு எழுதுவது இல்லை. அதற்காக ஒரு தேவதையை படைக்க எண்ணினார். ஒருமுறை அவர் சக்தி தேவியை பார்க்க பார்வையின் குறிப்பறிந்த அவள் ஒரு சித்திரம் வரைந்தாள். அதற்கு இருவரும் உயிரூட்டவே அதிலிருந்து தோன்றியவரே சித்திரபுத்திரர் ஆவார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 7 =

Most Popular