Tuesday, October 17, 2023
HomeAstrological Remediesசுக்கிரனையே வசியம் செய்யும் பரிகாரம்!

சுக்கிரனையே வசியம் செய்யும் பரிகாரம்!

பணத்தை வாரி வழங்கும் சுக்கிர பகவானையே வசியம் செய்ய ஜவ்வாதை இந்த பொருளுடன் சேர்த்து வையுங்கள். அப்புறம் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சுக்கிர திசை தான்.

செல்வ செழிப்போடு புகழின் உச்சியில் இருப்பவரை பார்த்தவுடன் அவர்களுக்கு என்ன சுக்கிர திசை அடித்து விட்டது என்று தான் முதலில் சொல்லுவோம். ஒருவருடைய வாழ்வில் சுக்கிர திசையானது வந்து விட்டால், அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தாலும் புகழின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்பேற்பட்ட சுக்கிரன் நமக்கு வசியம் ஆக வேண்டும் என்றால் இந்த ஜவ்வாதை இப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பண வரவிற்கு சுக்கிர வசிய பரிகாரம்:

சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த, உகந்த பொருள்களில் ஒன்று ஜவ்வாது. இந்த ஜவ்வாதை தினமும் பயன்படுத்தி வந்தாலே போதும், நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் நீங்கி நேர்மறை ஆற்றல் மேலோங்கி எப்பொழுதும் ஒரு நல்ல தெளிவான மனநிலையோடு இருக்கும்.

அடுத்து சுக்கிர பகவானுக்கு உகந்த வஸ்திரம் வெள்ளை நிறம். ஜவ்வாது பயன்படுத்தும் போது எப்படி ஒரு நல்ல நேர்மறை எண்ணங்கள் மேலோங்கி இருக்கிறதோ, அதே போல் எப்போதும் வெள்ளை உடையே அணிபவர்கள் பெரும்பாலும் சமுதாயத்தில் நல்ல ஒரு நிலைமையில் புகழில் உச்சியில் தான் இருப்பார்கள்.

எந்த கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் அவர்கள் எப்படியாவது சமாளித்து முன்னேறி விடுவார்கள். இதற்கு காரணம் வெள்ளை சுக்கிர பகவானுக்குரிய வஸ்திரம். அதை எப்போதும் அணிபவர்களுக்கு சுக்கிர வசியம் உண்டாகும்.

இப்போது இந்த இரண்டையும் எப்படி நாம் பயன்படுத்த வேண்டும் என்பது தான் இந்த பரிகாரம். இந்த ஜவ்வாது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இதற்கு நல்ல தரமான ஜவ்வாதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல நல்ல தூய்மையான வெண்மை நிறம் உள்ள ஒரு சிறிய துணி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த ஜவ்வாது சேர்த்து மூட்டையாக கட்டி விடுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அவர்கள் பணம் புழங்கும் இடத்தில் இந்த மூட்டையை வைத்து விடலாம்.

வீட்டில் நாம் பணம் வைத்து எடுக்கும் இடத்தில் இந்த மூட்டையை வைத்து விடுங்கள். அதே போல் பூஜை அறையிலும் இந்த ஒரு மூட்டையை வைத்து விடுங்கள். நாம் பணம் புழங்கும் இடத்தில் எல்லாம் இந்த ஜவ்வாது வெள்ளை துணி மூட்டை வைத்து விடுங்கள்.

தினமும் நாம் ஜவ்வாதை நெற்றி பொட்டு வைக்கும் இடத்தில் திலகமாக வைத்துக் கொள்ளலாம். ஆடையிலும் ஒரு வாசனை திரவியம் போல இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இவை அனைத்திலும் விட ஒரு சிறிய வெள்ளை துணியில் ஜவ்வாதை கொட்டி மடித்து அதை உங்கள் மணி பரிசில் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜவ்வாதின் மணம் அதில் குறையும் போதெல்லாம் மீண்டும் ஜவ்வாது தடவி வைக்க வேண்டும். இந்த எளிய பரிகாரத்தை கடைப்பிடித்து வரும் பொழுது சுக்கிரன் அனுகிரகம் நமக்கு எப்பொழுதும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது இருக்கும் இடத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உடையவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து சுக்கிர அணு கிரகத்தை பெற்று செல்வ வளத்துடன் வாழ வழி தேடி கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =

Most Popular