தங்கம் சேர பரிகாரம்!

32

இந்த மூன்றும் இருந்தால் போதும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் – தங்கம் சேர பரிகாரம்!

இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தால் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லாத வீட்டில், தங்கம் சேரும். அழிவில்லா அளவில்லா செல்வக் கடாட்சத்தை பெற செய்ய வேண்டிய தாந்திரீகம்.

என்னதான் காசு பணத்தை கையில் வைத்திருந்தாலும், எல்லோருக்கும் தங்கம் வாங்கக்கூடிய யோகம் வந்துவிடாது. கையில் காசு பணமே இல்லை என்றால் கூட, சிலர் கஷ்டப்பட்டு உழைத்து, சீட்டு கட்டி தங்கம் வாங்குவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தங்கம் வாங்கக்கூடிய யோகம் இருக்கு. வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், நிச்சயம் தங்கம் இருக்க வேண்டும். மகாலட்சுமி ஸ்வரூபத்தில் இருக்கக்கூடிய அந்தத் தங்கம் சில பேர் வீட்டில் பவுன் பவுன் ஆக இருந்திருக்கும். ஆனால் ஏதோ ஒரு கால சூழ்நிலை காரணமாக நகையை எல்லாம் அடமானம் வைத்திருப்பார்கள். உதாரணத்திற்கு தொழில் தொடங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், என்று தங்கத்தை அடமானத்திற்கு வைத்திருப்பார்கள். நகையை மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

தங்கம் சேர ஒன்றாக வைக்க வேண்டிய 3 பொருட்கள்:

நேர்மறை ஆற்றலை கொண்ட இந்த 3 பொருட்களையும் ஒன்றாக வைத்தால் வீட்டில் தங்கமும் பணமும் நிறைய சேரும். நேர்மறை ஆற்றலை அள்ளிக் கொடுக்கக் கூடிய பொருள் தான் பச்சை கற்பூரம். இது இறை சக்தியை, நேர்மறை ஆற்றலை ஈர்த்துக் கொடுக்கும். அடுத்தபடியாக சொல்லக் கூடிய பொருள் கிராம்பு. இது மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் உகந்த பொருள். பெருமாள் கோவில் தீர்த்தத்தில் கிராம்பு இல்லாமல் இருக்காது. பச்சை கற்பூரமும் பெருமாள் கோவில் தீர்த்தத்தில் சேர்க்கக் கூடிய ஒரு பொருள்தான். அடுத்தபடியாக சொல்லப்பட்டுள்ள பொருள் துளசி இலை.

மகாலட்சுமியின் ஸ்வரூபம், பெருமாளின் ஸ்வரூபம் இந்த துளசி இலை தான். ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் பச்சை கற்பூரம் சின்ன துண்டு, துளசி இலைகள் இரண்டு, கிராம்பு மூன்று இந்த பொருட்களை எல்லாம் போட்டு உங்களுடைய வீட்டில் குண்டுமணி தங்கம் இருந்தால் அதில் ஒன்றை இந்த பொருளோடு வைத்து பீரோவில் வைத்து விட்டால் போதும். அந்த குண்டுமணி தங்கம் சில நாட்களில் பெருக தொடங்கிவிடும். அதாவது நிறைய தங்கம் வாங்கும் யோகத்தை உங்களுக்கு இந்த சின்ன பரிகாரம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

தங்கம் இல்லாத வீடு பெரும்பாலும் இருக்காது. உங்களுடைய வீட்டில் தங்கம் இல்லை என்றால் பரவாயில்லை. இந்த மூன்று பொருட்களையும் பீரோவில் வைத்து விட்டு தங்கம் வாங்கக் கூடிய யோகத்தை பெற வேண்டும் என்று குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமியிடம் பிரார்த்தனை வையுங்கள். இந்த பரிகாரத்தை ஒரு பௌர்ணமி நாளில் ஒரு வெள்ளிக் கிழமையில் செய்தால் நல்லது.

துளசி இலைகள் காய்ந்து விட்டால் அதை எடுத்து கால்படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதிய இலைகளை வைக்கலாம். பெருமாள் கோவிலுக்கு போறீங்க. அங்கு பிரசாதமாக துளசி இலை கொடுப்பாங்க. அதை வாங்கி வந்து இந்த கிண்ணத்தில் போட்டு வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லதுங்க. பெருமாள் கோவிலில் கொடுக்கக்கூடிய தீர்த்தத்தை கொண்டு வந்து பீரோவுக்குள் லேசாக தெளித்து விடுங்கள். நிறைய தண்ணீர் ஊற்றி விட்டால் பூசனம் பிடித்து விடும். இல்லையென்றால் அந்த தீர்த்தத்தை ஒரு கிண்ணத்தில் ஊற்றி திறந்தபடி கீழே கொட்டாமல் சிறிது நேரம் பீரோவுக்குள் வைத்து எடுக்கலாம். அந்த பாசிட்டிவ் எனர்ஜியும் வீட்டில் மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.