Monday, October 16, 2023
HomeAstrological Remediesதிருமணம் நடக்க பரிகாரம்!

திருமணம் நடக்க பரிகாரம்!

திருமணம் நடக்க பரிகாரம்!

திருமண வயதை தாண்டியும், திருமணம் ஆகாமல் இருக்கும் தங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் போது, பெற்றவர்களுக்கு நிச்சயம் கவலை இருக்கும். அதிலும் நாம் வெளியிடங்களுக்கு செல்லும்போது, வேறு ஒரு நல்ல விசேஷத்திற்கு செல்லும் போது, அங்கு இருப்பவர்கள் உன் பையனுக்கு எப்போ கல்யாணம், உன் பொண்ணுக்கு எப்போ கல்யாணம், என்று கேட்கும்போது நம்முடைய மனது ரொம்பவும் கஷ்டப்படும். அதேபோல தான் திருமணமாகாத பெண்ணையோ, அல்லது பையனையோ போய் சில பேர் கேட்பார்கள்.

உனக்கு எப்போ இப்படி எல்லாம் நடக்க போகுது. இவ்வளவு வயசாகியும் ஒரு நல்லது நடக்காமல் இருக்கே அப்படின்னு கேட்பாங்க. இந்த கஷ்டத்தை எல்லாம் அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும், இதற்கு பின்னால் இருக்கும் வலியும் வேதனையும். உங்களுக்கு தெரிந்தவர்கள் இப்படி யாராவது திருமண வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்கும் சூழ்நிலையில் இருந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு

சீக்கிரம் திருமணம் நடக்க எளிமையான பரிகாரம்:

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு சின்ன கண்ணாடி பவுல் தேவை. கொஞ்சமாக கல் உப்பு தேவை. ஒரு குண்டு மஞ்சள் தேவை. அவ்வளவு தான். வழக்கம் போல பரிகாரம் செய்வதற்கு முன்பு பூஜை அறையில் விளக்கு ஏற்றி குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளவும். பிறகு ஒரு கைப்பிடி கல் உப்பை எடுங்க.

மனதார திருமணம் நடக்க வேண்டும் என்று சொல்லி அந்த கல் உப்பை, அந்த பவுலில் போடவும். அடுத்தபடியாக குண்டு மஞ்சளை உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு, மனதார திருமணம் நடக்க வேண்டும் என்று குலதெய்வத்திடும் பிரார்த்தனை செய்து அந்த உப்பின் மேல் வையுங்கள். மீண்டும் ஒரு கைப்பிடி கல்லுப்பை எடுத்து, மீண்டும் ஒருமுறை மனதார திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அந்த மஞ்சளுக்கு மேல் ஒரு கைப்பிடி கல்லுப்பை வைத்து மூடி விடுங்கள்.
கல் உப்புக்கு உள்ளே இருக்கும் குண்டு மஞ்சள் வெளியே தெரியக்கூடாது. அவ்வளவுதான்.

இந்த கிண்ணத்தை பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை திருமணம் ஆகாத குறிப்பிட்ட அந்த ஆண், பெண் செய்யலாம். அவர்களால் செய்ய முடியாது எனும் பட்சத்தில் பெற்றவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக இந்த பரிகாரத்தை வேண்டி செய்யலாம். தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது இந்த பவுலில் இருக்கும் கல் உப்புக்கு ஊதுவத்தி காண்பித்து வரவும். மூன்று மாதத்திற்கு இந்த பவுலில் இருக்கும் கல்லுப்பையும் மஞ்சளையும் மாற்ற வேண்டாம்.

மூன்று மாதங்கள் கழித்து பழைய கல் உப்பை தண்ணீரில் கொட்டி கரைத்து விட்டு, புதுசாக கல்லுப்பை வைத்து பழைய மஞ்சளை நடுவில் புதைத்து வைக்கவும். ஒருவேளை மஞ்சளில் வண்டு பிடிப்பது போல இருந்தால் மஞ்சளையும் மாற்றி விடுங்கள். இப்படி கல்லுப்பையும் குண்டு மஞ்சளையும் வைத்து தினமும் சுப காரிய தடை விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், அந்த சுப காரிய தடையானது சீக்கிரம் விலகும் என்பது ஒரு நம்பிக்கை.

இதை நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கும் வரை செய்ய வேண்டும். திருமணம் ஆன பெண்கள் எல்லாம் தங்களுடைய தாலி பிரித்து கோர்ப்பார்கள் அல்லவா. அவர்களுடைய வேண்டுதல் இந்த பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும். நேர்மறை ஆற்றல் நிறைந்த இந்த ஆடிப்பெருக்கு தினத்தில் இந்த பரிகாரத்தை செய்யும்போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பதால் தான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + eight =

Most Popular