வீட்டில் தரித்திரம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

121

வீட்டில் தரித்திரம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

ஒருவருடைய வீட்டில் தரித்திரம் இருந்தால் அந்த வீட்டில் செல்வ சேர்க்கை என்பது தடைபடுகிறது. தரித்திரம் என்பது மகாலட்சுமியின் அருள் இல்லாததை குறிக்கும் ஒரு சொல்லாகும். மகாலட்சுமி இருக்கும் இடத்தில் தரித்திரம் தங்குவதில்லை! எனவே மகாலட்சுமி இல்லாத இடத்தில் தரித்திரமும், வறுமையும் தாண்டவம் ஆடுகிறது.

இத்தகைய தரித்திரம் நீங்கி உங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் இன்றி செல்வ மழை பொழிய பசுவின் இந்த ஒரு பொருளை இப்படி 45 நாட்கள் பயன்படுத்த வேண்டுமாம். அப்படியான எளிய பரிகாரம் என்ன? இதன் பலன்கள் என்னென்ன?

ஒருவருடைய இல்லத்தில் சுபிட்சம் நிலைத்து நிற்க, அந்த வீட்டில் எப்பொழுதும் மகாலட்சுமியின் கடாட்சம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்காகத் தான் இந்து சமுதாயத்தில் காலையில் மாலையிலும் விளக்கேற்றி வழிபட்டு வருவது கடைபிடிக்கப்பட்டது. இன்று இருக்கும் அவசர உலகில் ஒரு வேளை விளக்கு ஏற்றுவது என்பதே அரிதாகிப் போய்விட்டது. இதனால் குடும்பத்தில் கஷ்டங்களும், துன்பங்களும் வந்து சேருகின்றன.

இறைவனை கும்பிட்டால் தான் நமக்கு நல்லது நடக்கும் என்பது இல்லை தான் ஆனால் இறைவனை கும்பிட கும்பிட நம்முடைய மனதில் இருக்கும் பல கேள்விகளுக்கான விடை கிடைக்க ஆரம்பிக்கும். அது மட்டும் அல்லாமல் நமக்கு ஒரு நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற தைரியத்தை கொடுப்பது இறை நம்பிக்கை மட்டுமே ஆகும். எனவே இறைவனை பிரார்த்திப்பது என்பது கட்டாயம் அவசியமாக இருக்கிறது.

உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவ ராசியும் தனித்துவமான தெய்வீகத்தை கொண்டுள்ளது. அந்த வகையில் பசு என்பது ரொம்பவே விசேஷமான ஒரு தெய்வாம்சம் நிறைந்த விலங்கினமாக கருதப்படுகிறது. கோமாதா என்று வழிபடப்படும் இந்த பசுவின் கோமியத்தில் மகாலட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால் தான் புதிய வீடு கட்டும் பொழுதும், நல்ல சுபகாரியங்கள் மற்றும் விசேஷங்களிலும் பசு கோமியம் தெளிக்கப்படுகிறது. பசு கோமியத்தில் இருக்கும் இந்த சூட்சமமான தெய்வீக விஷயங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிந்திருப்பது நல்லது.

வடமாநிலத்தவர்கள் பலரும் பசுவினை போற்றி பாதுகாக்கின்றனர். அடிக்கடி பசுவிற்கு தானம் கொடுப்பது, பசுவால் கிடைக்கக்கூடிய நெய், வெண்ணை, பால், தயிர் என்று எல்லா பொருட்களையும் பயன்படுத்துவது, தானம் செய்வது போன்றவற்றை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் நம்முடைய வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்க பசு கோமியத்தை சிறிதளவு வீட்டில் 45 நாட்களுக்கு தினமும் தெளித்து வாருங்கள். அது மட்டும் அல்லாமல் நீங்கள் குளிக்கும் பொழுதும் கொஞ்சம் பசுவின் கோமியத்தை சேர்த்து குளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்ய உங்கள் உடம்பில் இருக்கும் தரித்திரமும், வீட்டில் இருக்கும் தரித்திரமும், பீடை போன்றவையும் தலைதெறிக்க ஓடிவிடும். இதனால் மகாலட்சுமி இல்லம் தேடி வரும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் வருமானம் அதிகரிக்கும். அது மட்டும் அல்லாமல் மனதில் இருக்கும் சஞ்சலங்களும், தீய எண்ணங்களும் நம்மை விட்டு செல்லும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நீங்களும் 45 நாட்கள் இது போல தொடர்ந்து செய்து வாருங்கள், அது மட்டும் அல்லாமல் வாரம் ஒரு முறையாவது பசுவிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம், வாழைப்பழம் போன்றவற்றை தானம் செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் எளிதாக தீரும்.