கண் திருஷ்டியை நீக்கும் கல் உப்பு – அறிவியல் உண்மைகள்!

150
கண் திருஷ்டி எனப்படும் தீயபார்வை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் காரணம் புரியாத இன்னல்கள் மூலம் இதனை நாம் உணரலாம். உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்களே இல்லை. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். பிரபல தத்துவ ஞானி பிரான்ஸிஸ் பேகன், ஒருவருக்கு பொறாமை மேலிடும் போது முதலில் அது அவரது கண்களில்தான் வெளிப்படுகிறது என்கிறார். மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக் கொல்லும் ஆற்றல் படைத்தது. சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார் திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் அளித்த அறிஞர் ப்ளூடார்க்! இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ், “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான். உயிரைப் போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண்கள் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார். கண் திருஷ்டி எனப்படும் தீயபார்வை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்படும் காரணம் புரியாத இன்னல்கள் மூலம் இதனை நாம் உணரலாம். சில பேருடைய பார்வை பட்டாலேயே போதும் திருஷ்டிக்கு உள்ளானவர் பல விதத்திலும் பாதிக்கப்படுவர். ஏன், சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுண்டு! பார்த்த பார்வையில் புதுச்சட்டை கிழியும்,பால் புளித்துப் போகும், பார்த்த பார்வையில் பல நாட்களுக்குச் சாப்பிடவே பிடிக்காது. வாந்தி எடுக்கும். இப்படி கெட்ட திருஷ்டியின் “மகிமையை”ச் சொல்லிக் கொண்டே போகலாம். இதனால்தான் எந்தவொரு நல்ல காரியம் நடந்து முடிந்தாலும் அதன் பின்னர் திருஷ்டி கழிக்கிறார்கள். திருஷ்டியிலிருந்து எப்படித் தப்புவது? முதல் வழி அப்படிப்பட்ட ஆட்களைப் பார்க்கவே பார்க்காதே என்பது தான். அடுத்த வழி சில தாயத்துகளை அணிவது தான். அரைஞாண் கயிற்றில் ஆரம்பித்து மணிக் கட்டு, புஜத்தின் மேல் பகுதியில் கயிறு கட்டுதல், கழுத்தில் தாயத்தை அணிவது என்று பல ரகங்களில் திருஷ்டியிலிருந்து தன்னைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் முயல்கின்றனர். நமது ஊரில் மிளகாயைப் மரக்கால் படியில் வைத்து திருஷ்டி சுற்றிப் போடுவர். கடல் உப்பை (கல் உப்பு ) வைத்து திருஷ்டி கழிப்பது அன்றாடப் பழக்கம். பூசணிக்காய் பற்றிச் சொல்லவே வேண்டாம். தமிழர் தம் பழக்க வழக்கங்களில் திருஷ்டியிலிருந்து பாதுகாக்க பல வழிகள் உண்டு. கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீயபார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் மையைத் தீட்டிக்கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள். சில பொல்லாத கண்களிலிருந்து பாது காப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு. மணமக்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் அவர்களை வாசலிலேயே நிறுத்தி வைத்து வீட்டில் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்கள், வயதானவர்கள் கற்பூரத்தை ஏற்றி அவர்களைச் சுற்றி திருஷ்டி கழிப்பது பழக்கம். இந்தியாவில் அனைத்து மாநில மக்களும் கண் திருஷ்டியைக் கழிக்க நவரத்தினங்களை அணி வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர். பல வித மணிகளினால் ஆன மாலை, ருத்ராட்ச மாலை போன்றவையும் தீய திருஷ்டிகளை விலக்கும் ஆற்றல் படைத்தவை என நம்பப் படுகின்றன! இப்படி தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் திருஷ்டி கழிக்கப் பல்வேறு வழிமுறைகள், தாயத்துக்கள், மணிகள் அணிவது ஆகிய வற்றைக் கடைப்பிடித்து வந்திருக்கின்றனர். வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலாக கண் திருஷ்டி கழிப்பதற்கு அனைத்து தேசத்தினரும் பயன்படுத்தியது, பயன்படுத்தி வருவது ஒரு எளிய சாதனம் தான். கல் உப்பு அல்லது கடல் உப்பு என்று சொல்கிறோமே அது தான்! (உப்புப் பொடி அல்ல; அதைப் பயன்படுத்தல் கூடாது) பிசாசு, பேய் உள்ளிட்ட தீய சக்திகள் அதைக் கண்டால் பயப்படுகின்றன என்று மக்கள் நம்புகின்றனர்.