நினைத்த காரியம் வெற்றியாக ஸ்வஸ்திக் பரிகாரம்!

37

நினைத்த காரியம் வெற்றி பெற ஸ்வஸ்திக் பரிகாரம்!

ஸ்வஸ்திக் சின்னத்தை பார்த்து இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும். நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நினைத்த வண்ணம் நிச்சயமாக நடக்கும்.
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தான் நினைப்பதெல்லாம் நடந்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இப்படி எத்தனை பேர் வாழ்க்கையில் தான் நினைப்பதை எல்லாம் நடத்தி சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி சாதிப்பவர்களை விரல் விட்டு எண்ணும் அளவிற்கு தான் இருக்கிறது.

அப்படியானால் ஏன் மற்றவர்களுக்கு தான் நினைக்கும் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியவில்லை எடுத்த காரியத்தில் வெற்றி கொள்ள முடியவில்லை என்பன போன்ற கேள்விகள் எல்லோருக்கும் இருக்கத் தான் செய்யும். ஒரு மனிதனின் தான் தொடங்கும் செயல் எல்லா வற்றிலும் தடங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்குமேயானால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அது ஜாதக ரீதியான காரணங்களாக இருக்கலாம் அல்லது கர்ம பலன், தோஷம் இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கிறது. இருப்பினும் ஒரு சில பரிகாரங்களை செய்யும் போது இந்த தடைகளை நிவர்த்தி செய்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியான ஒரு பரிகார முறையை பற்றி தான்

நினைத்த காரியம் வெற்றி பெற ஸ்வஸ்திக் பரிகாரம்:

இந்த சின்னத்தை பற்றி அறிந்திராதவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த சின்னமானது வெற்றி, லாபம், தனம், வரவு என்பனவற்றையெல்லாம் குறிக்கும். பெரும்பாலும் வடநாட்டவர் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை அதிகமாக பயன்படுத்தி தான் தங்களுடைய தொழில் வியாபாரம் என அனைத்திலும் வெற்றி பெற்று வருகிறார்கள் என்ற ஒரு கருத்தும் உள்ளது. அப்படியான இந்த சின்னத்தை பயன்படுத்தி நாம் நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளை சந்தித்து கொண்டிருப்பதை எப்படி சரி செய்யலாம் என்பதை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

காரிய தடைகளை நீக்கும் ஸ்வஸ்திக் சின்ன பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை நிற பேனா அல்லது மார்க்கர் வைத்து ஸ்வஸ்திக் சின்னத்தை அழகாக வரைந்து கொள்ளுங்கள். இந்த சின்னமானது பேப்பர் நடுவில் இருப்பது போல வரைந்து கொள்ளுங்கள். அதன் மேல்

ஓம் நமசிவாய ஓம்

என்ற இந்த மந்திரத்தையும் எழுதி விடுங்கள். இப்போது நீங்கள் உங்கள் வீட்டில் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்திருப்பதற்கு நேர் எதிரில் உள்ள சுவற்றில் மந்திரமும் ஸ்வஸ்திக் சின்னமும் எழுதிய இந்த பேப்பரை ஒட்டி விட வேண்டும். இந்த பேப்பரில் உள்ள ஸ்வஸ்திக் சின்னத்தை பார்த்தவாறு முதலில் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு அமைதியாக ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமர்ந்திருங்கள். அதன் பிறகு இந்த மந்திரத்தை ஸ்தஸ்திக் சின்னத்தை பார்த்தபடியே சொல்லுங்கள்.

இந்த மந்திரத்தை உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள். ஆனால் சொல்லும் போது ஸ்வஸ்திக் சின்னத்தை பார்த்தபடியும் கிழக்கு முகமாக அமர்ந்து தான் சொல்ல வேண்டும். இதை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்தவுடன் செய்யும் பொழுது இதற்கான பலன் அதிகமாகவே இருக்கும். இதை தொடர்ந்து செய்ய செய்ய உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் இதை நீங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.