Saturday, October 21, 2023
HomeAstrological Remediesபிரச்சனைகளூக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பரிகாரம்!

பிரச்சனைகளூக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பரிகாரம்!

பிரச்சனைகளூக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பரிகாரம்!

காலை, மாலை இருநேரமும் வாசலில் விளக்கு ஏற்ற வேண்டும். நல்லெண்ணையால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது. தீப கதிர் வீச்சு சுற்று புறத்தில் காந்த சக்தியினை காற்றில் சேர்க்கும். இக்காற்று மனித உடலிலும், மனதிலும் நல்ல ஆக்கப் பூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகின்றது.

குறிப்பாக பசு நெய் தீபத்திற்கு இப்புனித தன்மை மிகக் கூடுதலாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. நெய் தீபம், உடல் நலம், மனவளம், தீய சக்தி விலகுதல், மகாலட்சுமி கடாட்சம் இவற்றுக்கு உகந்ததாகக் கூறுகின்றனர். எனவே காலை, மாலை இருநேரமும் வாசலில் நெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

நல்ல எண்ணெயால் ஏற்றப்படும் தீபத்தினால் அனைத்து தோஷங்களும் தீய சக்திகளும் நீங்குகின்றது. நீண்ட கால தீரா பிரச்சினைகளால் உடையவர்கள், பூர்வ ஜென்ம கர்மங்களால் பாதிக்கப்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம், சனி இவைகளின் பாதிப்பில் உடையவர்கள் நல்ல எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

வேப்பிலை எண்ணெய் குல தெய்வ வழிபாடு பராசக்தி வழி பாட்டிற்கு உகந்தது. சத்ருக்களால் பாதிக்கப்படுபவர்கள் வேப்ப எண்ணெய் கொண்டு 8 விளக்கேற்றி அமாவாசையில் பைரவரை வழிபடலாம்.

விளக்கெண்ணை கொண்டு தீபம் ஏற்றுவது குடும்ப வளம், குடும்ப உறவுகள் ஒற்றுமை இவற்றினை கொடுக்கும். தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்ற பிள்ளையார் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி பெருகும். பஞ்சு எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் தீபம் கண்திருஷ்டி, அறிவுப்பூர்வ எண்ணங்கள், வறுமை, நோய் இவற்றினை நீக்கும்.

பொதுவாக நெய் தீபமும், நல்ல எண்ணெய் தீபமும் வீடுகளில் ஏற்றுவது நடைமுறையில் உள்ளது. கிழக்கு நோக்கி தீபம் ஏற்றுவது ஒருவரை இந்திரன் போல் ஆக்கிவிடுமாம். மேற்கு நோக்கி தீபம் ஏற்றுவது கடன் தொல்லை, சனி தோஷம் நீக்கும்.

வடக்கு நோக்கி தீபம் ஏற்றுவது திருமண தடைகளை நீக்கும். தெற்கு நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது. மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கில் திருமகள் வாசம் செய்வாள். பஞ்சலோக விளக்கில் தேவதை வசியமாகும்.

வெண்கல விளக்கில் ஆரோக்கியம் கிடைக்கும். இரும்பு விளக்கினால் சனி தோஷம் நீங்கும். குத்து விளக்கினை நடு முற்றத்தில் போட்ட கோலத்தின் மீது வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சள் திரி கொண்டு நெய் ஊற்றி விளக்கேற்றி, பூ சுற்றி வழிபட வறுமை நீங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =

Most Popular